ராமதாஸ் சொல்வதே வேத வாக்கு!! அதிமுகவிற்கு தேமுதிகவுக்கு எல்லாமே அய்யாதான்...
கடந்த காலங்களில் பல தேர்தலை சந்தித்த அனுபவம் இருப்பதால், தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து, தங்கள் கட்சிக்கு மட்டுமின்றி, அதிமுக, மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்களுக்கும் அட்வைசராக ராமதாஸ் ஆலோசனை வழங்கி வருகிறார்.
கடந்த காலங்களில் பல தேர்தலை சந்தித்த அனுபவம் இருப்பதால், தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து, தங்கள் கட்சிக்கு மட்டுமின்றி, அதிமுக, மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்களுக்கும் அட்வைசராக ராமதாஸ் ஆலோசனை வழங்கி வருகிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, அரசு நிர்வாகத்தை, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், கடுமையாக விமர்சித்தனர். ஜெயலலிதா மறைவால், முதல்வரான ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததோடு மட்டும் அல்லாமல், ஊழல் குற்றச்சாட்டுகளும் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்ல, அடுக்கடுக்காக ஊழல் புகார்களை ஆளுநரிடம் கொடுத்தார் அன்புமணி. இதனால் அதிமுக - பாமகவினர், எதிரும் புதிருமாக இருந்தனர். யாரும் எதிர்பாராத வகையில், அதிமுக கூட்டணியில் இணைந்த, பாமகவுக்கு, 7 + 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அந்த அணியில், பிஜேபி - தேமுதிக, - புதிய தமிழகம், புதிய நீதி கட்சிகள் இடம் பெற்று உள்ளன.
கடந்த காலங்களில் அதாவது மறைந்த தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது, முந்தைய சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில், திமுக - அதிமுகவுடன், பாமக, கூட்டணி அமைத்தது , அவர்களுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்திய அனுபவம், ராமதாசுக்கு உள்ளது என்பதால் பல்வேறு ஆலோசனைகளைக் கேட்டு வருகிறார்களாம்.
இதனால், தற்போதைய, அதிமுக கூட்டணி கட்சிகளால் ராமதாஸ், மூத்த தலைவராக கருதப்படுகிறார். சமூக வலைதளங்களில், பாமக தலைவர்கள் விமர்சித்தது தொடர்பாக, மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தாலும் இதைப் பற்றியும் கவலைப்படாமல் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கூட்டணியால், எதிர்க்கட்சிகள் கலாய்ப்பதையும், அவற்றுக்கு எப்படி முறியடிப்பது, தொண்டர்களை களப்பணி ஆற்ற வைப்பது, எந்த ஊரில், எந்த பிரச்னை பற்றி பேச வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக, பாமகவுக்கு மட்டுமில்லாமல், அதிமுக - தேமுதிக என கூட்டணி கட்சிகளுக்கும் அட்வைஸராக மாறியிருக்கிறார் ராமதாஸ்.