அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை கண்டித்து, பாமக மாநில நிர்வாகியாக இருந்த ராஜேஸ்வரி பிரியா   கட்சியில் இருந்து விலகி  தனியாக கட்சி தொடங்க உள்ளதாகவும் அறிவித்த ராஜேஸ்வரி பிரியா, நேற்று  கூவத்தூர் ‘‘கோல்டன் பே’’ ரிசார்ட்டில் புதிய கட்சி பெயர் மற்றும் கொடி அறிமுக விழாவை நடத்தினார். ராஜேஸ்வரி பிரியா தொடங்கிய கட்சிக்கு, ‘‘அனைத்து மக்கள் அரசியல்  கட்சி’’ என்ற பெயரும் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். 

பாமாவிலிருந்து வெளியில் வந்த ராஜேஸ்வரி பிரியா,  ஒரே நாளில் கட்சி ஆரம்பித்து, கொடியை அறிமுகப்படுத்தி. கொள்கையை சொல்லி, தேர்தலில் போட்டியிட போவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்துவிட்டார். 

அதிமுக கூட்டணியுடன் பாமக சேர்ந்ததுமே பலருக்கு அதிருப்தியை தந்தது. அதனால் பாமகவிலிருந்து வெளியே வந்த ராஜேஸ்வரி பிரியா கமல் கட்சியில் சேருவார் என சொல்லப்பட்டது.  ஆனால் அப்படி இணைவதாக பரவும் தகவல்கள் வதந்தி என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், கட்சியிலிருந்து வெளியில் வந்த அவர், வேறு யாருடனும் கூட்டணி வைக்காமல் தனிகட்சியை தொடங்கி உள்ளார்.  "அனைத்து மக்கள் அரசியல் கட்சி" என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். இந்த கட்சியில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருவாரூர், தூத்துக்குடி உள்பட பல  மாவட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கட்சியை ஆரம்பித்த கையோடு  வரும் தேர்தலிலும் போட்டியிட உள்ளாராம். வடசென்னைத் தொகுதியில் களமிறங்கும் ராஜேஸ்வரிப்ரியா, மயிலாடுதுறையில் வேறொரு இளைஞரும் களமிறங்க உள்ளாராம் . 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராங்கேஸ்வரி ப்ரியா, மாநில உரிமைகளில் எவ்வித  பாரபட்சமும், சமரசமும் செய்துகொள்ளாமல் இந்திய இறையாண்மையின்  ஆளுமைக்கு உட்பட்டு நடப்போம்.  நாடாளுமன்ற தேர்தலில், எங்கள் கட்சியின் சார்பில் தென்சென்னையில்  நான், மயிலாடுதுறை தொகுதியில் ஒருவர் போட்டியிட  உள்ளோம் என்றார். 

ஒரு கட்சியில் இருந்து  வெளியேறி இன்னொரு கட்சிக்கு தாவாமல்,  சொந்தமாக கட்சி ஆரம்பித்துள்ள ராஜேஸ்வரி ப்ரியா அரசியல் தலைவர்களையே யோசிக்க வைத்துள்ளார்.  இந்த இளம் வயதிலேயே ஒரு பெண்ணாக இருந்து, அதுவும் தனித்து கட்சி ஆரம்பித்து, போட்டியிடவும் போவதாக அறிவித்திருப்பது தமிழக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.