நெல்லையில் கிருஷ்ணசாமி கட்சி காலி ... திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்... ஒரு தொகுதி போச்சே, அதிர்ச்சியில் அதிமுக!!

அதிமுக அணியில் இணைந்து இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று  திமுகவில் இணைந்ததால் ஒரு தொகுதி அனாமத்தா போச்சே என அதிமுக அதிர்ச்சியில் உள்ளதாம்.

Pudhiya thamizhagam administrator join dmk

அதிமுக அணியில் இணைந்து இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று  திமுகவில் இணைந்ததால் ஒரு தொகுதி அனாமத்தா போச்சே என அதிமுக அதிர்ச்சியில் உள்ளதாம். சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முதல் கட்ட நேர்காணலை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் தனது நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு வந்தார்.

புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் குற்றாலம், இளைஞரணி துணைச் செயலாளர் மங்கள் ராஜ் மற்றும் நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் பல்வேறு ஒன்றியங்களில் இருந்தும் முன்னாள் நிர்வாகிகள்  உட்பட 100 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் நிர்வாகிகளும்  கொத்தாக கூண்டோடு காலி செய்துவிட்டு திமுகவிற்கு வர இருக்கிறார்கள். அந்த மாவட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளில் புதிய தமிழகத்தின் பலம் இருக்கும் என நம்பி ஒரு சீட் கொடுத்த அதிமுகவுக்கு ஷாக் செய்தியை கடுத்திருக்கிறார்கள் அந்த கட்சியின் முக்கிய செயலாளர்கள்.

Pudhiya thamizhagam administrator join dmk
 
“நான் புதிய தமிழகம் கட்சியில் சுமார் 25 ஆண்டுகளாக உழைத்து வந்திருக்கிறேன்.  பல ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியில் உழைத்தவர்களுக்கு அங்கே உழைப்புக்கு உரிய  மரியாதை இல்லை. முரண்பட்ட கூட்டணியை வைத்துக் கொண்டு  எங்களின் மீதும் சமுதாய மக்கள் மீதும் திணிக்கப் பார்க்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி என நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

மேலும், என்னைப் போன்று இன்னும் நிறைய மாவட்டச் செயலாளர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இன்று கூட ரயில் கிடைக்காத காரணத்தால் மேலும் பல நிர்வாகிகள் இன்று வர முடியவில்லை. விரைவில் அவர்களும் வருவார்கள் என்றார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios