ஜெயலலிதாவைப் பார்த்து விஜயகாந்த் நாக்கைத் துருத்தியதற்கு காரணம் என்ன? பிரேமலதா சொன்ன பகீர்

விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து நாக்கைத் துருத்தியதன் பின்னணியை கேட்ட தேமுதிக அதிமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் கட்சியும் ஒரே ஷாக்.

Premalatha vijayakanth explained Assembly fight with Jayalalitha

விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து நாக்கைத் துருத்தியதன் பின்னணியை கேட்ட தேமுதிக அதிமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் கட்சியும் ஒரே ஷாக்.

அன்று சட்டசபையில் என்ன நடந்ததுன்னு பல பேருக்குப் புரியாது, இதுவரை யாருக்குமே தெரியாது, ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்க என்று அதிமுகவும் தேமுதிகவும் பிரிந்ததற்கான காரணத்தைக் கூறினார். 

Premalatha vijayakanth explained Assembly fight with Jayalalitha

“அன்னைக்கு சட்ட சபையில் நடந்த மிகப்பெரிய பிரச்சனைக்கு பின்னால இருந்தது திமுகவுடைய சூழ்ச்சிதான் இருந்தது. எதைச்சொன்னால், கேப்டனை உணர்ச்சிவசப் படுத்தலாம். எப்படி எல்லாம்  நடந்துகொண்டால் ஜெயலலிதாவைக் கோபப்படுத்தலாம். அப்படிங்கிறத தெரிஞ்சிக்கிட்டு, ஜெயலலிதாவை எரிச்சல்படுத்துற மாதிரி விஜயகாந்த்தை சில வார்த்தைகளைப் பேச வைத்தனர். 

Premalatha vijayakanth explained Assembly fight with Jayalalitha

அதிமுக - தேமுதிக கூட்டணியைப் பிளவுபடுத்த வேண்டுமென்று துரோகிகளை வைத்து சட்டமன்றத்திலேயே சதி செய்து, கூட்டணியை முறிக்கச் செய்தனர் என்று விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து நாக்கைத் துருத்தியதற்கு இது தான் காரணம் என மேடையிலிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

‘எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் கேப்டன்’, அவரின் பலவீனத்தை திமுக பயன்படுத்திக்கொண்டது என கூறி அதிரவைத்தார் பிரேமலதா.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios