பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை, அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அதுமட்டுமல்ல பிரேமலதாவை கண்டித்து தேமுதிக கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். 

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக கூட்டணி தலைவர்கள் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக பிரேமலதாவின் உளறல் பேச்சு கூட்டணி காட்சிகளை எரிச்சலடையச் செய்திருப்பது தேமுதிக தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் பேசிய  தேமுதிக பொருளாளர் பிரேமலதா;பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை, அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசி இருக்கிறார். மேலும் உங்கள் எல்லோரிடமும் கேட்பது இதுதான். இந்த கூட்டணி கண்டிப்பாக உங்களுக்கு உறுதுணையாக இருந்து எல்லா விதத்திலும் உதவும். உங்களின் பாதுகாப்பிற்கு எங்கள் கூட்டணி உறுதியளிக்கும் என்று பிரேமலதா பேசி இருக்கிறார். பிரேமலதாவின் இந்த கொச்சைப் பேச்சால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

பிரேமலதா பாலியல் குற்றங்கள் நடந்தாலும் பரவாயில்லை அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பெண்களை இழிவாக பேசியதை கண்டித்து தேமுதிகவிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். தேர்தல் நேரத்தில் இவர்கள் இப்படி முடிவெடுத்து இருப்பது கூட்டணி காட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் தேனி மாவட்ட தேமுதிக மகளிரணி துணை செயலாளர் ஈஸ்வரி  தலைமையில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தனது உறுப்பினர்கள் அட்டையுடன் வந்து அமமுக கட்சியில் இணைந்தனர். தினகரன் முன்னிலையில் இவர்கள் தேமுதிக கட்சியில் இணைந்தனர்.