ஓட்டுக்கு துட்டு கொடுக்க தனி டீம்!! கூட்டணி கட்சிகளுக்கு ஒரு டிபார்ட்மென்ட்!! பழைய ஃபார்முலாவை மாற்றிய அரசியல் கட்சிகள்
நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பது பணம் தான். அந்த பணம் எப்படியெல்லாம் இந்தமுறை விநியோகம் நடக்கிறது என அரசியல் காட்சிகள் புது டெக்னீக்கை கையாள உள்ளதாம்.
நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பது பணம் தான். அந்த பணம் எப்படியெல்லாம் இந்தமுறை விநியோகம் நடக்கிறது என அரசியல் காட்சிகள் புது டெக்னீக்கை கையாள உள்ளதாம்.
தேர்தல் என்றால் புது தலைவனை தேர்ந்தெடுக்கும் நாள் என்பதைத் தாண்டி, மக்களுக்கு திருவிழா என்ற, நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில், வேட்பாளர்களுக்கு, ஓட்டு கேட்டு செல்வோருக்கு, வேட்பாளர் தன் செலவில், டீ வாங்கி கொடுப்பார் வேறு எதுவும் தர மாட்டார்.
கட்சியின் மீதுள்ள வெறித்தனமான கட்சியினர், தங்களுடைய கை காசை செலவழித்து, பிரசாரம் செய்தனர். தற்போது, நிலைமை தலைகீழ். பணம் இருந்தால் தான், எதையும் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஒரு அரசியல் கட்சி வேட்பாளர், ஒரு வட்டத்தில், ஓட்டு கேட்க செல்வதற்கு முன், அந்த ஏரியாவின் கிளை செயலாளருக்கு கொஞ்சம் காசு கொடுக்க வேண்டும். அந்த பணத்தில், அவர் வேட்பாளரை வரவேற்க, கூட்டத்தை திரட்டுவார் சால்வை, பட்டாசு போன்றவற்றை வாங்குவார். அதன்பின், வேட்பாளருடன் வீடு வீடாக செல்ல ஆட்களை ஏற்பாடு செய்வார். அவர்களுக்கு, 200 அல்லது 300 ரூபாய், மதியம் பிரியாணி வழங்கப்படும்.
இது போக, வேட்பாளர்களை வரவேற்று, ஆரத்தி எடுக்கும் பெண்கள், வீட்டின் முன் கோலமிடும் பெண்கள், மடிமேல் இருந்து பூ துாவும் பெண்களுக்கு, வேட்பாளர் தன பாக்கெட்டிலிருந்து செலவழிக்க வேண்டும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, பிரச்சாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு பெட்ரோல், கட்சியினருக்கு சரக்கு விருந்து என பணம் தாறுமாறாக செலவாகும். கடந்த தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்து விட்டது. ஓட்டுக்கு துட்டு கொடுக்கும் பழக்கம், அண்ணா காலத்திலேயே இருந்துள்ளது. 1 ஓட்டுக்கு, 5 ரூபாய் கொடுத்த காலம் போய், ரூ.500, ரூ.1000 வழங்கும் அளவுக்கு வந்துள்ளது. இடைத்தேர்தலில், ஓட்டின் மதிப்பு, ரூ.2000 வரை வந்துள்ளது.
மேலும், முதல் முதலில் மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் புது ஃபார்முலாவை அறிமுகப்படுத்தினார் முக அழகிரி. அந்த தேர்தலில் கிடைத்த பிரமாண்ட வெற்றியை அடுத்து இடைத்தேர்தலில் பணம் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெறலாம் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளிடமும் ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை, ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பணம் வழங்கும் பொறுப்பு, மூன்றாவது நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், பணம் மக்களை சென்றடையவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இம்முறை கட்சியினரிடமே, பணம் வினியோகத்தை ஒப்படைக்க, அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிசாக, ரூ.1000, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் நேரடியாக சென்றடைந்து விட்டது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை, 3வது நபரிடம் ஒப்படைத்தால், கட்சியினர் விரக்தி அடைவர். எனவே, இம்முறை கட்சியினர் வாயிலாக, பணத்தை வினியோகம் செய்யலாம். முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை, 3வது நபரை வைத்து கண்காணிக்கலாம் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இதற்கு நேர் மாறாக, திமுக தலைமை முடிவு செய்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஓட்டுக்கு காசு விநியோகம் செய்வதற்காக, மாவட்ட செயலர்கள் எடுத்துக் கொண்டனர்.
தேர்தல் முடிந்ததும், வேட்பாளர்களை கேட்டபோது, மாவட்ட செயலர்கள் பணம் வழங்காததை தெரிவித்தனர். இது தொடர்பாக, அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக, புகார் எழுதி வாங்கி உள்ளது. திமுக தலைமை. இம்முறை பணம் வினியோகம் குறித்து மூத்த நிர்வாகிகளும், மாசெக்களும் கேட்டபோது, கண்டிப்பாக பண்ணுவோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த தேர்தல்களை போல இல்லாமல் , 3வது நபர் மூலமாக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுமாம்.
அதுமட்டுமல்ல, இரு கட்சிகளும், கூட்டணி கட்சிகளிடம் பணம் கொடுக்காமல், மொத்தமாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக அதிமுக காட்சிகளே செலவு செய்வது என்ற முடிவில் உள்ளதாம். இதேபோல தனித்து போட்டியிடும் தினகரன் மட்டும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டுமே பணத்தை வாரி இறைக்க முடிவு செய்துள்ளது.