ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு 500, கும்ப மரியாதையுடன் மாஸ் பிரசாரம் பண்ணும் ஓபிஆர்!!

ஆரத்தி எடுத்த ஒவ்வொரு தட்டிற்கும் ரூ500 பணம் விநியோகம் செய்யப்பட்டது. குழந்திகள் தூக்கிக்கொண்டு வரும் பெண்களுக்கு எக்ஸ்டராவா 200 ரூபாய், வயதான பாட்டிக்குகளுக்கு 300 என ஓபிஎஸ் மகன் ஓபிஆரின் பிரசாரக் கூட்டம் களைகட்டுகிறது.

OPS SOn OPR Mass election campaign

தேனியில், அதிமுக பிஜேபி கூட்டணியின் வேட்பாளராக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓபிஆர், திமுக கூட்டணியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், தினகரனின் தளபதி என்ற கெத்துடன் ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வனும் களம் காண்கிறார்கள். எப்படியும் தனது மகனைத்தான் ஓ.பி.எஸ் இறக்குவார் என விஷயம் தெரிந்த தினகரன், ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் களத்திற்குப் பதிலாக, தேனி எம்.பி. தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை களம் இறக்கியிருக்கிறார்.

OPS SOn OPR Mass election campaign

ஓபிஎஸ் மகன் ஓபிஆரின் வாக்கு வேட்டை…

அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட ரவீந்திரநாத் தேர்தல் பிரச்சாரத்தில், தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

கிராமம் கிராமமாக வாக்கு கேட்க ரவீந்திரநாத் செல்வதற்கு முன்பே அந்தந்த பகுதியிலுள்ள கட்சிக்காரர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பெண்களைத் திரட்டி, தலைக்கு 500 ரூபாய் என பேரம் பேசி டோக்கன் கொடுத்து, ஆரத்தியுடனும், கும்ப மரியாதையுடனும் அந்தப் பெண்களை வரிசையில் நிற்க வைத்து விடுகிறார்கள்.

* ஒவ்வொரு ஊரிலும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஆரத்தி எடுக்க பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என அனைவரும் அழைத்து வரப்படுகிறது.

OPS SOn OPR Mass election campaign

* மகளிர் குழு தலைவிகளிடம் அழைத்து வரப்பட்ட பெண்களின் பெயர் பட்டியலை வாங்கிக் கொண்டு டோக்கன் போன்ற சிறு காகிதத்தை கொடுக்கப்படுகிறது.

*ஆரத்தி எடுத்து முடித்ததும், அவர் சென்ற பின் பின்னால் வந்த வண்டியில் டோக்கனைக் கொடுத்து மொத்தமாக பணத்தை பெற்று பிரித்துக்கொண்டனர்.

OPS SOn OPR Mass election campaign

*ஆரத்தி எடுத்த ஒவ்வொரு தட்டிற்கும் ரூ500 பணம் விநியோகம் செய்யப்பட்டது. குழந்திகள் தூக்கிக்கொண்டு வரும் பெண்களுக்கு எக்ஸ்டராவா 200 ரூபாய், வயதான பாட்டிக்குகளுக்கு 300 என ஓபிஎஸ் மகன் ஓபிஆரின் பிரசாரக் கூட்டம் களைகட்டுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios