ஓபிஎஸ் மகன் ஓபிஆர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு  மனுவை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்விடம்  தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில்  தனது அசையும் அசையா சொத்து விவரங்கள்  குறிப்பிட்டுள்ளார் ஓபிஎஸ் மகன் ஓபிஆர்.

OPS Son OPR Filed his Assets Details

தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஒபிஎஸ்  மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் களத்தில் குதித்திருக்கிறார். இந்த நிலையில் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு  மனுவை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்விடம்  தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில்  தனது அசையும் அசையா சொத்து விவரங்கள்  குறிப்பிட்டுள்ளார். 

அந்த சொத்து மதிப்பில்,  தனது கையில் ரொக்கமாக 82 ஆயிரத்து 714 ரூபாயும், தனது மனைவியிடம் 62 ஆயிரத்து 450 ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

வங்கி கணக்குகளில்; 

#சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 63 ரூபாய்.

# பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 410 ரூபாய்
 
#மனைவிக்கு பெரியகுளம் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் 41 ஆயிரத்து 307 ரூபாய்

#மகன் ஜெய்தீப் பெயரில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கி கிளையில் ஒரு லட்சத்தி 63 ஆயிரத்து 153 ஒரு ரூபாய். 

#மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே கிளையில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 67 ரூபாய்
 
#ரிலையன்ஸ் மணியில் 56 ஆயிரத்து 300 ரூபாய் 

#விஜயானந்த டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனத்தில் 33 ஆயிரத்து 340 ரூபாய் பங்குகள் 

#பஞ்சாப் நேஷனல் வங்கியில் மீட்டர் இன்சூரன்ஸில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 575 ரூபாய் 

# 6 லட்சத்து 37 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் ஐ-10 கார் 

#36 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள டயோட்டா கார்.

OPS Son OPR Filed his Assets Details 
 
#120 கிராம் தங்கமும் 1.1 கிலோ வெள்ளி

#மனைவியிடம் 76வது கிராம் தங்கம் 4.75 கிலோ வெள்ளி  10 கேரட் வைரம்.

#மகன் ஜெயந்த் இவ்விடம் 120 கிராம் தங்கம் 

#மகள் ஜெயஸ்ரீ இடம் 300 கிராம் தங்கம் 

#மகன் ஆதித்யாவிடம் 120 கிராம் தங்கம். 

 #ரவீந்திரநாத் குமாரிடம் இருக்கும் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 24 ரூபாய்.

#மனைவி பெயரில் 31 லட்சத்து 58 ஆயிரத்து 506 ரூபாய்.

#மகன் ஜெய்தீப் 5 லட்சத்து 23 ஆயிரத்து 256 ரூபாய்.

#மகள் ஜெயஸ்ரீ 10 லட்சத்து 60 ஆயிரத்து 67 ரூபாய்.

#மகன் ஆதித்யா 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

OPS Son OPR Filed his Assets Details

நிலம்;

இது போக, விவசாய நிலமாக ரவீந்திரநாத் குமாரிடம் பெரியகுளம் மற்றும் தாமரை குளம் ஆகிய கிராமங்களில் 31.37 ஏக்கர் நிலம். அனைத்தும் 2011-ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும் அந்த நிலத்தில் 15 லட்சம் மதிப்பிலான கட்டுமானம் செய்திருப்பதாகவும் தற்போது அதன் மதிப்பு தோராயமாக ஒரு கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 136ரூபாய் எனவும் தனக்கு பூர்வீக சொத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடன்;

வங்கிகள் மற்றும் தனிநபர்கள் இடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்த வேண்டிய தொகை 3 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 79 ரூபாய். தனது தம்பி பிரதீப்புக்கு 33 லட்சத்து 3 ஆயிரத்து 131 56 ரூபாய்.

தனது தாய் விஜயலட்சுமிக்கு 83 லட்சத்து பத்தாயிரம் ரூபாயும் கடன்.  இந்த மேற்கண்ட தகவல்கள் வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios