Asianet News TamilAsianet News Tamil

தேனியில் ஜெயிக்கப்போறது நான் தான்... யார் நின்னாலும் காலி!! சபதமெடுத்த ஓபிஆர்...

தமிழக மக்கள் அம்மா அரசு அறிவித்த நலத்திட்டங்களும் இதுவரை தொகுதி மேம்பாட்டுக்கு ஆற்றிய திட்டங்களையும், மக்களிடம் எடுத்துக்கூறி இத்தொகுதியில் போட்டி போடும் நான் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவேன் என ஓபிஎஸ் மகன் ஓபிஆர் தனது பயோ டேட்டாவில் கூறியுள்ளார்.

OPS son OPR Challenges for win in Theni
Author
Theni, First Published Mar 19, 2019, 8:10 PM IST

துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மகன்  ஓ.பி.ரவீந்திரநாத்குமார்,  1980 ஆண்டு பிறந்தவர். தென்கரை, பெரியகுளம் தாலுகா, தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், BBM, MBA, PGDM படித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு கட்சியில் இணைந்த இவர், மாவட்ட செயலாளர், தேனி இளைஞர் இளம்பெண்கள் பாசறை 2009 முதல் 2016 வரை பதவி வகித்துள்ளார். அதன் பின் தேனி ஜெ.பேரவை மாவட்ட செயலாளர், 2018 முதல் தற்போது வரை தேனி மாவட்ட கோ-கோ கழகம் சங்க தலைவர் கழகத்தில் உறுப்பினராக  இருக்கிறார்.

தேனி தொகுதியில் போட்டியிட கொடுத்த பயோ டேட்டாவில்; எனது 13வது வயதில் திண்டுக்கல்லில் அம்மா அவர்களிடம் நேரில் பார்த்து உரையாடினேன். அதிமுகவில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நேர்மையுடனும், விசுவாசத்துடனும் கட்சிப் பணியை மேற்கொண்டு எனது கடும் உழைப்பால் கட்சிக்கு நற்பெயரை சம்பாதித்ததோடு 2001, 2006, 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் 2004, 2009, 2014 பாராளுமன்ற தேர்தலிலும் அந்த காலகட்டங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பணியாற்றி உள்ளேன். 12க்கும் மேற்பட்ட தேர்தலில் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது.

OPS son OPR Challenges for win in Theni

2011ம் ஆண்டில் தலைமை கழகத்தின் அம்மாவின் பொற்கரங்களால் நேரடியாக கட்சி நல நிதியாக 50 லட்சம் நிதி அளித்தது. அப்போது அம்மா எனது செயல்பாடுகளை கேட்டறிந்து என்னை பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாது. கழக இளைஞர் இளம்பெணகள் பாசறை தேனி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கம் மேலான இளைஞர் இளம்பெண்களை புதிய உறுப்பினராக சேர்த்துள்ளேன்.

இது போக, கேரளா மாநிலத்தில் உள்ள பீர்மேடு பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றி கழகத்திற்கு முதல் வெற்றிபெற வைத்தேன். நான் அம்மா மீதும், கழகத்தின் மீதும் நான் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாகவும், அர்ப்பணி உணர்வுடன் நான் மேற்கொண்ட கடின உழைப்பாலும் தொடர்ந்து நான் ஆற்றி வரும் மக்கள் நல பணிகளிலும், தேனி மாவட்டத்திலும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் நெஞ்சங்களிலும், கழக தொண்டர் உள்ளங்களிலும் இடம்பெற்றுள்ளேன். 

OPS son OPR Challenges for win in Theni

அதுபோல் கடந்த 21 ஆண்டுகால பொதுவாழ்வில் அம்மா வகுத்து தந்த நல்லொழுக்க பாதையில் கடந்த 21 ஆண்டுகால பொதுவாழ்வில் அதை சீருடன் கடைபிடித்து வருகிறேன். கழகத்திற்கும், கழகத்தின் தலைமைக்கும் மக்கள் ஆதரவு பெருகும் வகையில் கடந்த 21 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கூட்டங்களை நேரடியாக நடத்தியும் மேற்பார்வை செய்து ஒருங்கமைத்தும் பார்ப்போர் பாராட்டும் வகையில் நடத்தி இருக்கிறேன். அதையடுத்து  கூட்டங்களிலும் தொண்டர்களுடன் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும், கட்டுங்கடங்காத கூட்டத்தோடும் உற்சாகமான வரவேற்போடு வெற்றிகரமாக நடத்தி இருக்கிறேன். இருபதுக்கும் மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்களும், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன். மேலும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான கூட்டங்களையும் சீரிய அளவில் நடத்தி இருக்கிறேன்.

OPS son OPR Challenges for win in Theni

இதுதவிர புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் மற்றும் அம்மா பிறந்தநாள் விழாவை கழக ஆண்டு விழா, வீரவணக்க நாள் போன்ற தலைமை கழகம் அறிவிக்கும் அனைத்து கூட்டங்களிலும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஆலோசனை வழங்கி எனது பங்களிப்பை சிறப்புடன் நடத்தி காட்டி இருக்கிறேன்.

விளையாட்டு மற்றும் சமூக நலன் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும் நகரங்களிலும் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி பல்வேறு விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கி உள்ளேன். அதுபோல் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் வாயிலாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன். 

OPS son OPR Challenges for win in Theni

தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் திறம்பட செயல்பட உறுதுணையாக இருந்து வருகிறேன். அதுபோல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கழக தொண்டர்களின் குடும்ப நிகழ்ச்சிகளிலும் கட்சி வேறுபாடு பாராமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். ஜாதி, மத, இனம் வேறுபாடு பார்க்காமல் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டு தளங்களிலும், பிரார்த்தனை நிகழ்ச்கிளிலும் பங்கேற்று இருக்கிறேன். எனது பொதுவாழ்வில் ஆணிவேராக நான் கருதுவது கட்சிக்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாக இருந்து கட்சிப் பணியாற்றிவதும், மக்கள் பணியாற்றுவதுமே.

OPS son OPR Challenges for win in Theni

இந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு நல்வாய்ப்பு தந்த அம்மா அவர்களின் ஆசியோடு கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணையோடு அம்மாவின் அரசு இதுவரை தமிழக மக்கள் அம்மா அரசு அறிவித்த நலத்திட்டங்களும் இதுவரை தொகுதி மேம்பாட்டுக்கு ஆற்றிய திட்டங்களையும், மக்களிடம் எடுத்துக்கூறி இத்தொகுதியில் போட்டி போடும் நான் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவேன் என இவ்வாறு அதில்  கூறி இருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios