மாலை 6 மணி பொதுக்கூட்டத்துக்கு இரவு 7:50க்கெல்லாம் வந்து நிற்கும் பங்சுவாலிட்டியிலேயே தெரியுது... மய்யத்தில் வெச்சு வெளு வெளுன்னு வெளுக்கும் நெட்டிசன்ஸ்!!
மாலை 6 மணி பொதுக்கூட்டத்துக்கு இரவு 7:50க்கெல்லாம் வந்து நிற்கும் பங்சுவாலிட்டியிலேயே தெரிகிறது இவரது Alternative அரசியல்! இதற்கு முன் ஒவ்வொரு முறை பொள்ளாச்சி நிகழ்வுகளிலும், நேரத்தை கடைப்பிடிப்பதில் இதே அலட்சியம். இதுல மத்தவங்கள கொற சொல்றதுல ஒன்னும் கொறச்சல் இல்ல.
நேற்று மாலை மாலை 6 மணி பொதுக்கூட்டத்துக்கு இரவு 7:50க்கெல்லாம் வந்து நிற்கும் பங்சுவாலிட்டியிலேயே தெரிகிறது இவரது Alternative அரசியல்! கோவை கூட்டத்தில் இவரின் டார்கெட் ஸ்டாலினாக மட்டுமே இருந்தது. ‘எதிர்க்கட்சி தலைவர் ‘யாருங்க கமல், நடிகர்தானே?’ன்னு கேட்டிருக்கிறார். ஆமா நான் நடிகர்தான்! ஆனால் நேர்மையான நடிகன். வருமான வரியை சரியாக செலுத்தும் நடிகன். அவரைப்பார்த்து ‘யார் நீ?’ன்னு நான் கேட்கலாம். கேட்டால் ‘அப்பாவுடைய மகன்’ன்னு சொல்லுவார்.
அதென்ன நடிகன்னா அவ்வளவு பயமா? ஏன் இந்த பயம்? ஓ............ஏற்கனவே ஒரு நடிகரிடம் ஆட்சியை இழந்த பழைய பயமா? அவரால் அரசியல் மற்றும் ஆட்சி வனவாசம் போக வேண்டிய நிலை வந்ததால் பயமா! எங்கே பழையபடி இன்னொரு நடிகன் சட்டமன்றத்தினுள் நுழைந்துவிடுவானோ? என்கிற பயம் அப்படித்தானே.
இன்று அரை மனதுடன் என்னை ‘நல்ல நடிகன்’ என்று ஏற்றுக் கொண்ட நீங்கள், கூடிய விரைவில் ‘நல்ல அரசியல்வாதி, நல்ல தலைவன்’ என ஏற்கும் நாள் வரும். என்னை உரசவேண்டாம்!
இலங்கையில் தமிழர்கள் இறக்கட்டும் கவலையில்லை என்று கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இன்று ஒன்று சேர்ந்து கைகுலுக்கியபடி தேர்தலை சந்திக்கிறார்கள். அப்படின்னு வெளுத்தெடுத்துட்டார்.
ஸ்டாலின் மீது இந்தளவுக்கு பாய்ந்து பிடுங்குமளவுக்கு கமல்ஹாசனுக்கு அவர் மீது அப்படியென்ன கோபம்? அவரது தன்மானத்தை தாறுமாறாக காயப்படுத்துமளவுக்கு ஸ்டாலின் ஏதாவது பேசிவிட்டாரா? என்று பார்த்தால், அப்படியொன்றுமே இல்லை. ஆனால் இந்த கூட்டத்தில் ஸ்டாலினை வைத்து வெளுக்க வேண்டிய கட்டாயம் என்ன? இப்போ எல்லோருடைய டார்கெட்டும் மோடி மீது இருக்கும் போது இவருக்கு மட்டும் ஏன் ஸ்டாலின் மீது காண்டு?
இப்படி வயக்கணமா பேசும் நீங்கமட்டும் யோக்கியமா? அரசியலுக்கு வந்த பின் உள்ளூர் கிழவன் ரேஞ்சுக்கு தரைதட்ட துவங்கிவிட்டீரே?
* மாலை 6 மணி பொதுக்கூட்டத்துக்கு இரவு 7:50க்கெல்லாம் வந்து நிற்கும் பங்சுவாலிட்டியிலேயே தெரிகிறது இவரது Alternative அரசியல்! இதற்கு முன் ஒவ்வொரு முறை பொள்ளாச்சி நிகழ்வுகளிலும், நேரத்தை கடைப்பிடிப்பதில் இதே அலட்சியம்.
* கட்சியினரை குழந்தைகள், குடும்பத்தோடு பல மணி நேரம் காக்க வைத்து விட்டு, வெகு லேட்டாய் வந்ததற்காக ஒரு Sorry கூட சொல்ல மனம் வராத அகந்தை!யில் தெறிக்கிறது இவரது மாற்று அரசியல்!
* வழக்கமான அரசியல்தனத்தின் செவ்வக வடிவ மேடையை மாற்றுவது மட்டுமே மாற்று அரசியல் என்று கமல் நினைத்தால்....அதே சாக்கடையில் புதிய லார்வா என்போம் உங்களை.
* ஹை எண்ட் காட்டேஜ்களில் தங்கியிருந்து, காஸ்ட்லி கார்கள் புடைசூழ வலம் வரும் இவர் பர்ஃப்யூம் மணக்கும் மேடைகளில் நின்று விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்னை குறித்துப் பேசும்போதுதான் புரிகிறது....கமலின் கண்கள் கலங்கிட கிளிசரின் என்றுமே தேவையில்லை என்று!
அரசியல்லேயும் நீங்க நடிக்கிறீங்கன்னு சொல்லலிங்க கமல்! ஆனா அப்படி நடிக்காம இருந்தால் நல்லா இருக்குமுன்னுதான் சொல்றோம். இப்படி மய்யத்தில் வெச்சு மைய மைய வெளுக்கிறார்கள் நடுத்தர விமர்சகர்கள்.