எங்களோட ரத்தத்தை விலைக்கு விற்க்கறீங்க!! கட்சியை தூக்கியெறிந்த தேமுதிக நிர்வாகி ஆவேசம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் பவுல்ராஜா. விஜயகாந்துக்கு எழுதிய கடிதத்தில் தேமுதிகவின் பேரத்தை கிழித்து தொங்க விட்டுள்ளார்.

Manali DMDK Administrator resigns his posting and wrote letter to Vijayakanth

அதிமுக, திமுக கட்சிகளுடன் ஒரே நேரத்தில் பேரம் பேசி பேசி தொண்டர்களின் உழைப்பை, ரத்தத்தை  விலைக்கு விற்க முயற்சித்தீர்கள்...  இனி உங்களை நம்பியவர்களை அடகு வைத்து தேர்தல் கூட்டணி பேசாதீர்கள்..  என்று தேமுதிக நிர்வாகி ஒருவர் விஜயகாந்த்துக்கு பரபரப்பான கடிதத்தையும் கூடவே ராஜினாமா கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார். 

கடந்த 2016 தேர்தலில் நடந்ததைப் போலவே தேமுதிகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிமுக திமுகவுடன் நடந்த பேரம் மீடியாவில் வெளியாகி தமிழக மக்கள் மத்தியில் தேமுதிகவின் பெயர் நாறிப் போனதால் தேமுதிக நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர். 

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் பவுல்ராஜா. விஜயகாந்துக்கு எழுதிய கடிதத்தில் தேமுதிகவை கிழித்து தொங்க விட்டுள்ளார்.

அவர் எழுதிய அந்த கடிதத்தில்; உங்களின் திரைப்பட நடிப்பை உண்மை என நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் கொள்கையை நல்லது என நம்பி கடந்த 1999-ல் ரசிகர் மன்றத்தில் துவக்கி நேற்று வரை உங்களுடன் பயணித்ததை எண்ணி வெட்கப்படுகிறேன், வேதனை அடைகிறேன்.  

Manali DMDK Administrator resigns his posting and wrote letter to Vijayakanth

அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்தேன் என அடிக்கடி கூறுவீர்கள். நேற்று உங்களின் உழைப்பை பார்த்த போது நீங்களும் ஒரு சராரி அரசியல் வியாதிதான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஒரே நேரத்தில் அதிமுக., திமுக கட்சிகளுடன் பேசி லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை, ரத்தத்தை நல்ல விலைக்கு விற்க முயற்சித்தீர்கள். தொண்டர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்தீர்கள்.  உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என இறைவனின் பிரார்த்தனை செய்ததற்கு நீங்கள் நல்ல கைமாறு செய்தீர்கள்.

உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என இறைவனின் பிரார்த்தனை செய்ததற்கு நீங்கள் நல்ல கைமாறு செய்தீர்கள்.பொது வாழ்வில் தொண்டனின் நலம், தமிழகத்தின் நலம் முன்னெடுத்து செல்ல வேண்டும். உங்களின் பொது வாழ்வு பதவி ஆசை என்ற நிலையில் உள்ளது.  இனியாவது உங்களை நம்பியவர்களை அடகு வைத்து தேர்தல் கூட்டணி பேசாதீர்கள். அதுதான் நீங்கள் தமிழகத்திற்கு செய்யும் நன்மை. உங்களிடம் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதால் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக மாபா. பாண்டியராஜன் இருந்தால் உங்களின் நிலை என்ன?

Manali DMDK Administrator resigns his posting and wrote letter to Vijayakanth

தி.மு.க.வில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக ஈரோடு சந்திரகுமார் மற்றும் பி.எச். சேகர் இருந்திருந்தால் நீங்கள் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருப்பீர்களா? உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இனியும் உங்களின் நடிப்பை நம்பி ஏமாற தயாராய் இல்லாததால் தே.மு.தி.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Manali DMDK Administrator resigns his posting and wrote letter to Vijayakanth

இந்த கடிதத்தை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இன்று கொடுத்து விட்டு பவுல்ராஜா, பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். கடந்த 2016 தேர்தல் சமயத்தில் நடந்ததைப்போலவே போலவே  தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.  மேலும் பல நிர்வாகிகள் வெளியேற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios