விழுப்புரம் சொந்த ஊராக இருந்தாலும், கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்கு தனது மகனை களமிறக்குவதற்காக, பாரிவேந்தரை வேறு தொகுதிக்கு அனுப்பிவைத்த பொன்முடி, எப்படியும் எவ்வளவு செலவு செய்தும் டெல்லிக்கு அனுப்பும் முயற்சியில் இருக்கும் பொன்முடியை மீறி, சாரி முன்முடியின் பணபலத்தை மீறி  சுதீஷ் எப்படி ஜெயிப்பார் என திமுகவினர் மட்டுமல்ல தேமுதிகவினர்களே கொஞ்சம் நடுங்கித்தான் போயிருக்கிறார்கள்.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகன் டாக்டர் கவுதம சிகாமணியை தேர்தல் களத்துக்குக் வந்துள்ளார். நடக்கவுள்ள தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், பொன்முடி மகன் கவுதம சிகாமணி, ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர்.கலாநிதி, கருணாநிதி மகள் கனிமொழி, முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் என வாரிசுகள்  பலரும் திமுகவில் சீட் கேட்டுள்ளனர். 

அதேபோல, அதிமுக கூட்டணியில் மன்றாடி கடைசியாக 4 தொகுதிகளை வாங்கிய தேமுதிக, அந்த தொகுதிக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. திருச்சி - டாக்டர். இளங்கோவன் போட்டி கள்ளக்குறிச்சி - எல்.கே சுதீஷ் போட்டி விருதுநகர் - அழகர்சாமி போட்டி வடசென்னை - அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் களமிறங்க உள்ளனர். விஜயகாந்துக்கு பலமான வாக்குவங்கி மற்றும் பாமகவின் கோட்டை என சொல்லப்படும் கள்ளக்குறிச்சியில் பலமான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு,  கவுதம சிகாமணியை விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியிலேயே நிறுத்தலாம் என சிலர் யோசனை சொன்னார்களாம். ஆனால், அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சீட் கேட்க வேண்டாம் என நினைத்த பொன்முடி, மகனை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப துரைமுருகன் மூலம் காய் நகர்த்தி சீட் வாங்கிவிட்டார்.

விழுப்புரம் தான் பொன்முடிக்கு சொந்த ஊரு ஆனால், விழுப்புரம் ரிசர்வ் தொகுதி என்பதால் அதற்குப் பதிலாக, கள்ளக்குறிச்சி தொகுதியை மகனுக்காக வாங்கிவிட்டார் பொன்முடி. தொகுதிக்குள் அவருக்கு எந்தவித பாசிட்டிவ் இமேஜும் இல்லை. பொன்முடி தரப்புக்குக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் பாசிட்டிவ் கருத்துக்கள் இல்லை. இதுபோன்ற சூழலில், சிகாமணிக்கு சீட்டை ஒதுக்கியதால் சொந்தக் கட்சிக்காரர்களே தேர்தல் வேலை பார்க்காமல் ஒதுங்கி விடுவதாகவும். கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள  12 ஒன்றிய செயலாளர்கள் கடிதம் எழுதி இருந்ததால் கலக்கத்தில் இருந்த பொன்முடி, வேட்பாளர் லிஸ்டை வெளியிடும் முன்பாகவே ஒவ்வொரு ஒன்றிய செயலாளர்களை நேரடியாகவே சந்தித்து சமாதனப்படுத்திய செய்தியை தலைமைக்கு சொன்ன பிறகே சீட் கன்ஃபார்ம் ஆனதாம்.

இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இங்கு தே.மு.தி.க வேட்பாளராக அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லபப்ட்டது. இந்த தொகுதியில்  விஜயகாந்த்தும் பலமான வாக்கு வங்கி வைத்திருப்பதாலும்,  தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என சொல்லப்பட்டது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சண்முகத்தை சுதீஷ் வெற்றிக்கு உதவ, நியமித்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் பாமக களப்பணிகளில் கவனம் செலுத்தாமல், உள்ளடி வேலைகளில் இறங்கும் என்பதாலும் தேமுதிக மசெகள் மொத்தமாக கள்ளக்குறிச்சிக்கு படையெடுக்க உள்ளார்களாம்.