சாதிக்பாட்ஷா செத்தது ஏன்? ஆட்சிக்கு வந்ததும் விசாரணையாம்! திருமா எங்கிட்டு போனலும் இதே டார்ச்சரா இருக்குதே!
சாதிக்பாட்ஷா செத்தது ஏன்? அண்ணாநகர் ரமேஷ் மரித்தது ஏன்: ஆட்சிக்கு வந்ததும் அல்லு தெறிக்கும் விசாரணையாம். எங்கிட்டு போனலும் இதே டார்ச்சரா இருக்குதே தல நொந்து போன திருமா!
என்னை எம்.பி.யாக தேர்வு செய்து அனுப்பினால், டில்லிக்கு யார் வந்தாலும், அங்கு எனக்கு ஒதுக்கப்படும் வீட்டில் உங்கள் வீடு போல் நினைத்து தங்கலாம்: சின்ராஜ் (நாமக்கல் - கொ.ம.தே.க. வேட்பாளர்)
(ப்பார்றா, அவனவன் ஓட்டுக்கு ஆயிரமா, ரெண்டாயிரமான்னு கால்குலேஷன் போட்டு பேசிட்டிருக்கான். ஆனா சின்ராசு பெரிய பிளான் போட்டு டெல்லி ஆசையை மக்களுக்கு ஊட்டுதுன்னு. ஹும் ஒருத்தனை ஏமாத்தனும்னா மொதல்ல அவனுக்கு ஆசையை தூண்டனும்!ன்னு ‘சதுரங்க வேட்டை’யில சும்மாவா சொன்னாய்ங்க?)
* கருணாநிதி உடல் நலன் இல்லாமல் ஆகி, ஒரு வருஷமா ஓய்விலிருந்தப்பவும் கட்சியின் தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்கலை. அப்பாவே நம்பாத இந்த மகனை, மக்கள் எப்படிங்க நம்புவாங்க?: எடப்பாடி பழனிசாமி.
(நல்லா சொல்லுதீக சாமி டீட்டெயிலு. ஆனா, உங்க ஆட்சியை வழி நடத்துறதா நீங்களே சொல்லிக்கிற ஜெயலலிதா, தனக்கு பிரச்னை வந்தப்பவெல்லாம் பன்னீரைத்தானே முதல்வராக்குனாங்க. ஒங்களை ஒரு தடவை கூட முதல்வராக்கலையே! என்னமோ இப்ப நீங்க மக்கள் ஓட்டுப் போட்டு முதல்வரான மாதிரி பேசுறீங்களே தல?)
* தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து விரிவாக, முறையாக விசாரித்து, குற்றவாளிகளை சிறையில் அடைப்பதே முதல் வேலை: ஸ்டாலின்.
(தல, வாழ்நாள் முழுக்க உங்களை எதிரிக்கட்சியா நினைச்சு, ஆத்திரம் காட்டுன அந்தம்மா மேலே காட்டுற அக்கறையில் பாதியை உங்க நண்பர் அண்ணா நகர் ரமேஷ் மற்றும் ராசாவின் நண்பர் சாதிக்பாட்ஷாவின் மரணங்களில் காட்டினால் தமிழகம் அப்படியே ஆச்சரியத்துல ஷாக் ஆகிடுமே! செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?)
* முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரள அரசுக்கு, மத்திய பா.ஜ.க. அரசு பச்சைக் கொடி காட்டியது தமிழத்துக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி: வைகோ.
(இருக்கட்டும். கேரளத்தை ஆளும் அதே மார்க்சிஸ்ட் கட்சி கூடதானே 2016ல இருந்து நீங்க தோள்ள கைய போட்டுக்கினு சுத்துறீங்க? ஒரு வார்த்த அந்த தோழர்களிடம் சொல்லி, தோழர் பினராயிட்ட பேச சொல்லக் கூடாதா? தமிழத்தில் கூட்டணி வேற, கேரளாவில் ஆட்சின்னா வேறன்னு தோழர்கள் எஸ்கேப் ஆகுவாங்கன்னு பயமா இருக்குதோ?)
* சிதம்பரம் தொகுதியில் முதலில் மோதிரம் சின்னம் கேட்டேன், கொடுக்கவில்லை. பின், வைரம், பலாப்பழம் ஆகிய சின்னங்களைக் கேட்டேன். அதையும் தரவில்லை. இறுதியாக பானை சின்னத்தை பெற்றோம். எல்லாருக்கும் ஒதுக்கும் வரையில் எங்களைக் காக்க வெச்சாங்க: திருமாவளவன்.
(எங்கிட்டு போனலும் இதே டார்ச்சரா இருக்குதே தல. கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா ‘ஸ்டாலினை முதல்வராக்குவோம்! ஸ்டாலினை முதல்வராக்குவோம்’ன்னு சவுண்டு விட்டீங்க. ஆனாலும் கூட்டணிக்குள்ளே அதிகாரப்பூர்வமா சேர்க்காம இழுத்தடிச்சு, அலையவிட்டு, நக்கல் பேசி, ஏளனம் பண்ணி, கட்டக்கடைசியில ரெண்டு தொகுதியை கொடுத்து தள்ளிவிட்டுச்சு தி.மு.க. ஹும் என்னத்த சொல்ல?)