தெறிக்கவிடும் ஸ்டாலின்... ஈரோட்டில் இறங்கியடிக்கும் மதிமுக!! ஒரே வேட்பாளருக்கு ஜிவ்வ்வ்வுன்னு ஏறுது ரேட்டிங்...

ஸ்டார் பேச்சாளர்களை கண்டிருக்கிறது தமிழக அரசியல் களம், ஆனால் நமக்கு நாமே நாயகன் சூப்பர் ஸ்டார் பேச்சாளராயிற்றே. ஒரு வில்லில் இருந்து புறப்பட்ட இருகூரிய அம்புகள் போல் இருவருமே ஈரோடு வேட்பாளர் கணேசமூர்த்திக்காக பெரும் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். 

High Ratting  foe MDMK ganesamurthy

பேச்சால் வளர்ந்ததுதான் திராவிட இயக்கங்கள். இன்றுதான் ஒரு கட்சியின் சித்தாந்தங்களை, சிறப்பம்சங்களை, தேர்தல் அறிக்கைகளை எல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்களும், செய்திதாள்களும், சினிமா நட்சத்திரங்களும் தேவைப்படுகிறார்கள். ஆனால் அன்றோ கட்சியின் தலைவனேதான் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு, மாநிலமெங்கும் சுற்றித் திரிந்து மேடை மேடையாக பேசி, கட்சியை வளர்ப்பார்கள். 

அதிலும் தேர்தல் காலமெல்லாம் வந்துவிட்டால் சர்வசாதாரணமான பேச்சுழைப்பாக இருக்காது திராவிட இயக்க தலைவர்களிடம். இப்போது போல் விமானமுமில்லை, விரைவு ரயிலுமில்லை, லைவ் ரிலே வசதிகளுமில்லை. மாட்டுவண்டி, பாசஞ்சர் புகைவண்டி, ஓரளவிலான கார் என்றுதான் போகும் பயணங்கள். கரூரில் கருணாநிதி பேசுகிறார் என்றால், பழநி மற்றும் தாராபுரம் பகுதிகளில் இருந்து மாட்டு வண்டி கட்டிக் கொண்டு தொண்டர்கள் மட்டுமல்ல சாதாரணம் மக்களும் வருவார்கள் முத்தமிழறிஞரின் பேச்சை கேட்க. 

High Ratting  foe MDMK ganesamurthy

குட்டிக்கே இப்படி என்றால் தாய் தலைவனான காஞ்சித் தலைவன் அண்ணாவுக்கு கேட்கவா வேண்டும்? அவரது வார்த்தை மழையில் நனைவதற்காக வண்டி கட்டிக் கொண்டு வந்து, மைதானத்திலேயே படுத்து உறங்கி, தலைவன் வந்ததும் அவன் பேச்சை உற்சாகமாக கேட்டு ரசித்திட, அங்கேயே மூட்டப்பட்ட முக்கல் அடுப்பில், காப்பித்தண்ணி போட்டு குடித்துவிட்டு கேட்கும் கூட்டம். 

அந்த பேச்சாளர் பரம்பரையில் வந்த இளைய கன்றான வைகோ வை பற்றி கேட்கவா வேண்டும்? கலைஞரே தன் நிலை மறந்து கேட்டு கைதட்டி ரசிப்பாரே புரட்சிப் புயலின் உரைவீச்சை! தேர்தல் வந்துவிட்டால் பிரசார படையில் எத்தனை பேரை இணைப்பது? என்று உதவியாளர் கேட்டால்...’தம்பி வைகோ ஒருவன் போதாதா? என் போர் வாள் இருக்க, கத்திகள் எதற்கு?’ என்பார். அந்த வாளும் வீரமாக களமாடி, கருத்தாக வெற்றியை  அள்ளி வரும். 

High Ratting  foe MDMK ganesamurthy

அப்பேர்ப்பட்ட வைகோவின் தம்பிதானே தளபதி ஸ்டாலின்! உடன்பிறவா அண்ணன் இல்லையென்றாலும், வைகோவின் உரைவீச்சுகளை, முரசொலிக்கு கட்டுரையாக வடித்திடும் பொருட்டு எத்தனை முறை கழக மேடைகளின் ஓரங்களில் அமர்ந்து கேட்டிருக்கிறார் தெரியுமா ஸ்டாலின். ‘பிற்காலத்தில் யார் போன்ற அரசியல் தலைவனாவாய்?’ என்று தளபதியிடம் கேட்கும்போதெல்லாம் ‘அப்பா போன்று சாதுர்யம், அண்ணன் வைகோ போன்று பேச்சு வீச்சும் கொண்டவனாய் வர ஆசை’ என்று பட்டென்று பதிலளிப்பாராம் வைகோ. ஆற்காட்டாரும், துரைமுருகனும் பல முறை இதைச் சொல்லிக்காட்டி மகிழ்ந்துள்ளனர். 

அண்ணாவை பார்த்து பேச்சில் வளர்ந்தார் கருணாநிதி. இவர்கள் இருவரையும் பார்த்து பேச்சுக் கலையில் மின்னினார் வைகோ. இம்மூவரிடமும் பாடம் பயின்று தனிப்பெரும் தலைவனாய் எழுந்து நிற்கிறார் தளபதி ஸ்டாலின்.

High Ratting  foe MDMK ganesamurthy

ஸ்டார் பேச்சாளர்களை கண்டிருக்கிறது தமிழக அரசியல் களம், ஆனால் நமக்கு நாமே நாயகன் சூப்பர் ஸ்டார் பேச்சாளராயிற்றே. ஒரு வில்லில் இருந்து புறப்பட்ட இருகூரிய அம்புகள் போல் இருவருமே ஈரோடு வேட்பாளர் கணேசமூர்த்திக்காக பெரும் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். 

இவர்கள் இருவரின் உரைவீச்சின் மூலம் தனக்கு மிகப்பெரிய சதவீத வாக்கு வங்கி ஆதரவளிக்கும், வெற்றி நோக்கி இட்டுச் செல்லும்! நாளை நமதே, ஈரோடும் நமதே! என்று களிக்கிறார் கணேசமூர்த்தி.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios