புகழ்ந்து தள்ளுவதில் ராமாதாஸ், அன்புமணியை மிஞ்சிய ஜிகே மணி!! மூச்சுக்கு மூச்சுக்கு அம்மா அம்மா என உருக்கம்!!
அதிமுக கூட்டணியில் சேர்ந்த பாமக, அதிமுக அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்களை மிஞ்சும் அளவிற்கு மானாவாரியாக புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதிமுக வேட்டி கட்டாத குறை தான், அநியாயத்துக்கென்று புகழ்ந்து தள்ளுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என சொல்வதைப்போல உள்ளது.
அதிமுக கூட்டணியில் சேர்ந்த பாமக, அதிமுக அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்களை மிஞ்சும் அளவிற்கு மானாவாரியாக புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதிமுக வேட்டி கட்டாத குறை தான், அநியாயத்துக்கென்று புகழ்ந்து தள்ளுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என சொல்வதைப்போல உள்ளது.
நேற்று விழுப்புரத்தில் பேசிய ராமாதாஸ் கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வருகிறது என புகழ, அதே நேரத்தில் தருமபுரியில் பேசிய அன்புமணியோ அதற்கு ஒரு படி மேலே போய் அதிமுக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். நேற்று அதிமுக வேட்பாளர் சரவணன் அறிமுகக் கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணியும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் எடப்பாடியை அடுத்து பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணியின் பேச்சைக் கேட்ட அதிமுகவினருக்கே இவர் பாமகவா, இல்ல அதிமுகவா என கன்பியூசன் ஆகும் அளவிற்கு அதிமுகவை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
அப்போது பேசிய அவர்; அம்மாவைப் பற்றி இங்கே பலரும் பேசினார்கள். நான் ஒரு உண்மையை சொல்லுகிறேன். அம்மா
முதல்வராக இருந்த போது என்னை ஒரு நாள் அழைத்தார்கள். ‘மிஸ்டர் மணி… நீங்க பேர்ல மட்டும் மணி வச்சிருந்தா போதாது. துட்டு சம்பாதிக்கணும்… ஃபியூச்சருக்கு என்ன பண்ணுவீங்க? என்று கேட்டார். நான் அம்மா, அம்மானு சொல்ல தொடர்ந்து அம்மா, ’ஃப்யூச்சருக்கு என்ன பண்ணுவீங்கனு நான் கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க ‘எனக்கு தோட்டம் இருக்குது, வீடு இருக்குதுனு சொல்லுவீங்க. அப்படியெல்லாம் நம்பி ஏமாந்துடாதீங்க.
நீங்க நல்ல களப்பணி செய்யுறீங்க. சட்டமன்றத்துல நல்லா பேசுறீங்க. நான் என்னதான் பதில் சொன்னாலும் நிறைய கேள்வி கேட்குறீங்க. நல்லா ஹோம் வொர்க் பண்றீங்க. அதனால உங்களுக்கு நானே ஒரு வழி சொல்றேன். நானே உங்களுக்கு பெரிய அமௌன்ட் தர்றேன் என்று சொன்னார் ஜெயலலிதா.
நான் உடனே, ‘அம்மா உங்க பாராட்டுக்கு நன்றிங்கம்மா, அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா’ என்று சொன்னேன். உடனே அம்மா, ‘நான் நன்றிக்காக சொல்லலங்க ஜிகே மணி. நான் சொல்றது உண்மை. நீங்க வாங்கிக்கங்க’ என்று சொன்னார்கள். ஆனாலும் நான் அந்தப் பணத்தை வாங்காமல் வந்துவிட்டேன். அந்த அளவுக்கு கொடை வள்ளலாக திகழ்ந்தவர் அம்மா என்று பேசியுள்ளார்.
புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் புரட்சித் தலைவியால் கட்டிக்காப்பாற்றப்பட்டு, இப்போது கழகத்தை வழி நடத்திச் செல்கிறார் எடப்பாடியார் அதிமுக நிர்வாகிகளே நம்ம பதவிக்கு ஆப்பு வைத்துவிடுவாரோ என அலறும் அளவிற்கு ஐஸ் வைத்துள்ளார்.