Asianet News TamilAsianet News Tamil

உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில்!! ஐ.ஐ.டி மாதிரியே டி.ஐ.டி.... பாமக அறிக்கையில் முக்கிய அம்சங்கள்...

தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%&ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும் என புது ஐடியாவும் கொடுக்கப்படும் என அறிக்கையில் கூறியுள்ளது.

Education  plan in PMK Election Manifesto 2019
Author
Chennai, First Published Mar 15, 2019, 4:44 PM IST

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும்,  பாஜகவுக்கும் 5 தொகுதிகளும் தேஉத்திக விற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதர கட்சிகளுக்கு தலா 1  தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை என்ற கோரிக்கையுடன் தமது தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தேர்தல் அறிக்கையை, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

இந்த அறிக்கையில் பல அம்சங்கள் இருந்தாலும் கல்வியை பற்றி பல சலுகைகள் கிடைக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

Education  plan in PMK Election Manifesto 2019

அதில்; கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

* வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படுவது போன்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில் இலவசமாக வழங்க பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும். இதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் பகிர்ந்து கொள்ள வகை செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளை அமைக்கவும், பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கும் தேவையான நிதியில் 50 விழுக்காட்டை மானியமாக வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம். 

* அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு கற்பித்தல் முறையை எந்த வகையிலும் மேம்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

Education  plan in PMK Election Manifesto 2019

* தரமான ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டம்தான் தரமான ஆசிரியர்களை உருவாக்குவதற்கான அடிப்படை ஆகும். அதை உணர்ந்து, உலக அளவிலான அனுபவங்களின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும்படி பா.ம.க. வலியுறுத்தும்.

* தொலைதூரங்களிலும், மலை கிராமங்களிலும் உள்ள பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆசிரியர் குடியிருப்புகளும், போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் எனக் கூறியள்ளார்.

உயர் கல்வியைப் பொறுத்தவரை...

* உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டும். 

* மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாணவர் ஆணையங்கள் அமைக்கப்படும். 

* வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

Education  plan in PMK Election Manifesto 2019

* நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை அறிமுகம் செய்யப்படும். 

* சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%&ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும் என புது ஐடியாவும் கொடுக்கப்படும் என அறிக்கையில் கூறியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios