எடப்பாடி வீட்டில் தடபுடல் விருந்து!! கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு!!
அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடுப்படியில் உள்ள, தன் வீட்டில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்தளிக்க, முதல்வர் முடிவெடுத்துள்ளார். கொங்கு மண்டல பாணியில் கிடா வெட்டி, அசைவ விருந்து அளிக்கப்பட உள்ளது.
அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடுப்படியில் உள்ள, தன் வீட்டில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்தளிக்க, முதல்வர் முடிவெடுத்துள்ளார். கொங்கு மண்டல பாணியில் கிடா வெட்டி, அசைவ விருந்து அளிக்கப்பட உள்ளது.
கூட்டணி தலைவர்களை அழைத்து, கொங்கு ஸ்டைலில், விருந்து வைக்க, முதல்வர், இபிஎஸ் முடிவெடுத்து உள்ளார். அதிமுக கூட்டணியில், பிஜேபி - பாமக - தேமுதிக- தமகா - புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பாமக - அதிமுக இடையே, முதலில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது, திண்டிவனத்தில் உள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்களுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் தடபுடலாக விருந்தளித்தார்.
இந்த விருந்தில், சைவ உணவுகள் மட்டுமே பறிமாறப்பட்டன. இதே போல, கூட்டணிகட்சிகளுக்கு பிரமாண்ட விருந்தளித்து அசத்த, முதல்வர் விரும்பினார். தேமுதிக கூட்டணியில் இணைவதில் இழுபறி ஏற்பட்டதால், விருந்தளிப்பதில் சிக்கல் நீடித்தது.
தற்போது, ஒரு வழியாக டீல் ஓகே வாகி, வேட்பாளர் பட்டியல் வரை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சேலத்தில் உள்ள, தன் வீட்டில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்தளிக்க, முதல்வர் முடிவெடுத்துள்ளார். கொங்கு மண்டல பாணியில் கிடா வெட்டி, அசைவ விருந்து அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தொகுதி பங்கீட்டில், கூட்டணி கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லை என்ற தகவல் தீயாக பரவும் நிலையில், அதை பொய்யாக்கும் வகையிலும், கூட்டணி தலைவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்திலும் இந்த விருந்து அமைய உள்ளது.
இந்த விருந்தில், பிஜேபி தமிழக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஏசிசண்முகம், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் துணைமுதல்வர், அமைச்சர்கள் என ஒட்டுமொத்தமாக பங்கேற்க உள்ளதால் எடப்பாடி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.