கொடநாடு கொள்ளையைக் கண்டுபிடித்தது அதிமுக அரசுதான் எனவும், பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு பார்த்தாலும் அதிமுக அரசு மீது குறை சொல்ல முடியாது  என முதல்வர் பழனிசாமி  பெருமிதமாகா கூறியுள்ளார்.

கொடநாடு கொள்ளையைக் கண்டுபிடித்தது அதிமுக அரசுதான் எனவும், பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு பார்த்தாலும் அதிமுக அரசு மீது குறை சொல்ல முடியாது  என முதல்வர் பழனிசாமி  பெருமிதமாகா கூறியுள்ளார்.

வேலூர், சத்துவாச்சாரியில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர், “வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஏழை மக்கள் ஏ.சி.சண்முகத்தின் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 600 ஏழை மாணவர்கள் அவரது கல்லூரியில் இலவசக் கல்வி பயிலலாம்” என்றார்.

கொடநாடு கொள்ளையைக் கண்டுபிடித்தது அதிமுக அரசுதான் எனவும், பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு பார்த்தாலும் அதிமுக அரசு மீது குறை சொல்ல முடியாது என்ற பழனிசாமி, “கொடநாட்டில் நான் கொள்ளையடித்திருப்பதாகவும், கொலை செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள். அந்தக் கொள்ளையைக் கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான். 

ஆனால், சிறையிலடைக்கப்பட்ட அந்தக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்திருப்பது இதே திமுக தான். அந்தக் கொலைக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். இல்லையென்றால் ஏன் அவர்களுக்கு ஜாமீன் பெற்றுத் தரப்போகிறார்கள்? அந்த சந்தேகத்துக்கும் அதிமுக அரசு விசாரணை நடத்தும் என்றார்.