அம்புமணி சொன்னதை செய்த எடப்பாடியார்... வேற லெவலுக்கு போகும் அதிமுக பாமக கூட்டணி!!
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆலோசனையை ஏற்று, பிரசாரத்தில் ஒயர்லெஸ் மைக் பயன்படுத்த துவங்கியுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆலோசனையை ஏற்று, பிரசாரத்தில் ஒயர்லெஸ் மைக் பயன்படுத்த துவங்கியுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலின் போது, பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டார். அவர், "மாற்றம், முன்னேற்றம், அன்புமணி" என்ற பெயரில், புதிய பிரசார யுக்தியை மேற்கொண்டார். அதவாது பிரசாரம், பொது கூட்டங்களின் போது, ஒரே இடத்தில் நின்று, மைக்கில் பேசுவதை தவிர்த்து நடந்துகொண்டே செம்ம ஸ்டைலாக பேசினார். ஆதாவது காதோடு அணியும், ஒயர்லெஸ் மைக் மாட்டிக்கொண்டு நடந்தபடி பேசினார். அதற்கு பாமக இளைஞர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் நடக்கவிருக்கும் தேர்தலில், அதிமுக கூட்டணியில், பாமக பமாக வேட்பாளராக அன்புமணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் எடபப்டி பழனிசாமி, பிரசாரம் செய்தார். ஒரே வேனில் நின்றபடி, அதிமுக அரசின் சாதனைகள், அன்புமணி, மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது செய்த பணிகள் குறித்து எடப்படியார் பேசினார். அப்போது, முதல்வர், ஒரு கையில் மைக் பிடித்தபடி பேச சிரமப்பட்டதைப் பார்த்த அன்புமணி, காதோடு இணைக்கக்கூடிய, மைக்கில் பேச அதாவது தான் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தில் பேசிய வொயர்லஸ் மைக்கில் பேச ஆலோசனை வழங்கினார்.
அதை ஏற்று எடப்பாடியும், வட சென்னை தொகுதியில், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து, காதோடு அணியும், ஒயர்லெஸ் மைக்கில் பேசி, பிரசாரம் செய்தார்.