திமுக வேட்பாளர் லிஸ்டில் வாரிசுகள், பழைய புள்ளிகள்!!

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. 20 லோக்சபா தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் பெரும்பாலும் வாரிசுகளும் பழைய புள்ளிகளும், மாற்று கட்சியிலிருந்து வந்த பிரமுகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

DMK Released Candidate list

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. 20 லோக்சபா தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் பெரும்பாலும் வாரிசுகளும் பழைய புள்ளிகளும், மாற்று கட்சியிலிருந்து வந்த பிரமுகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் பெரிய பரபரப்பாக இருக்கிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக திமுக பெரிய கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் அதிகமாக திமுக தலைவர்களின் வாரிசுகளே களத்தில் குதித்துள்ளனர்.

யார் போட்டி திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல் இதோ...

சென்னை வடக்கு - ஆற்காடு வீரசாமியின் மகன்  டாக்டர். கலாநிதி வீராசாமி, (திமுகவின் முக்கிய தலைவராக இருந்த ஆற்காடு வீராசாமி முதுமை காரணமாக தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி கொண்டதால், அவருடைய மகனான V.கலாநிதிக்கு திமுக மருத்துவ அணி இணைச் செயலாளராக தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.)

DMK Released Candidate list

சென்னை தெற்கு - தமிழச்சி தங்கபாண்டியன்(தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகள்  ஆவார்.  திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தற்போது திமுகவின் மகளிரணியில் முக்கிய பதவி வகித்து வருகிறார்.  தமிழச்சி என்னும் சுமதி, காவல்துறை அலுவலரான சந்திரசேகர் என்பவரை மணந்து, இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.)

DMK Released Candidate list

மத்திய சென்னை - தயாநிதி மாறன் ( முரசொலி மாறனின் இரண்டாம் மகன், கருணாநிதியின், சகோதரியின் பேரன். முன்னர் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தவர். நெசவுத்துறை அமைச்சராக இருந்து ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார்)

DMK Released Candidate list

வேலூர் - கதிர் ஆனந்த் ( திமுக பொருளாளராகவும் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகன் தான் கதிர் ஆனந்த், சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் வேலூர் தொகுதியை கைப்பற்றியதால் மகனுக்காக இந்த தொகுதியை கேட்டு வாங்கியிருக்கிறார் )

DMK Released Candidate list

கள்ளகுறிச்சி  தொகுதியில் போட்டியிடப்போவது  கவுதம சிகாமணி. முன்னாள் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் தான் இந்த கவுதம சிகாமணி.

DMK Released Candidate list

தூத்துக்குடி - கனிமொழி. ( இவர் திமுக அரசியல்வாதி. தற்போது, இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர்  கருணாநிதியின் மகள்).

DMK Released Candidate list

இதுபோக, தேமுதிகவிலிருந்து கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுகவிற்கு தாவிய எஸ்.ஆர்.பார்த்தீபன் சேலம் தொகுதியில் நிற்கிறார்.

1996ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்றுமுறை தமிழ்நாட்டின் அரக்கோணம் தொகுதியிலிருந்து மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜகத்ரட்சகன் அதே அரக்கோணம் தொகுதியில் களம் காண்கிறார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் ஆ.ராசா, கடைசியாக 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 16 நவம்பர், 2010 வரை பொறுப்பு வகித்தவர். மக்களவைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவரும் அதே நீலகிரியில் நிற்கிறார்.

DMK Released Candidate list

 1996 முதல் நான்கு முறை மக்களவையின் உறுப்பினராகத் தென் சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்துள்ள இவர் தற்போது ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் நிற்கவுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios