மக்களவை தேர்தலில் பாமகவை எப்படியாவது திமுக கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்றன.  இதற்கான முயற்சியை அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் பாமக திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்தது. இதனையடுத்து விஷ்ணுபிரசாத் பாமகவை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் கூட்டணிக்கான பணபேரம் நடந்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

மைத்துனர் விஷ்ணுபிரசாத்தின் இந்த பேச்சு எனக்கும், எனது மனைவிக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அன்புமணி பெட்டியில் கூட சொல்லியிருந்தார். ஸ்டாலின் ஒருபடி மேலே போய், எனது உறவினரை வைத்து விமர்சனம் செய்துள்ளார். எங்களை எதிர்த்தால் தான் அவருக்கு ஒரு சீட்டு என்று கூறி இருப்பார்கள். அதற்கு 30 ஆண்டு கால பந்த பாசத்தை, குடும்பத்தை விட்டுக் கொடுப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை  மைத்துனர் மீது வருத்தம் உள்ளதாக கூறினார்.

இதெல்லாம் நடந்துகொண்டிருக்க, அன்புமணி - விஷ்ணுபிரசாத் குடும்ப உறவுகள் மத்தியில் பகையாக்கி பரபதம் விளையாட பிளான் போட்ட திமுக, விஷ்ணுபிரசாத்தை தேர்தல் களத்தில் இறக்கிவிடப் பிளான் போட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் விஷ்ணுபிரசாத் நிறுத்தப்பட்டுள்ளதால், அன்புமணி தனது மைத்துனருக்கு எதிராக ஆரணி தொகுதியில் பிரசாரம் செய்தாக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கட்சி வேட்பாளரின் பலத்தை காட்டிலும் எதிராளியின் பலவீனத்தை தூண்டும் விதமாக தாறுமாறாக தாக்கிப் பேசுவார்கள், இந்நிலையில் ஆரணியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலைக்கு ஆதரவாக, கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் என்ற முறையில்  அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது அன்புமணிக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படும் நிலை உள்ளது.

பொன் ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை  பட்டியலிட்டு வாக்குச் சேகரிப்பாரா? இல்லை தனது மைத்துனரை தாக்கி பேசி ஒட்டு கேட்ப்பாரா?  குடும்பத்துக்குள் குஸ்தியை தூண்டிவிட்ட குஷியில் இருக்கும் திமுக என்ன நடக்கும் என ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.