திமுகவின் அந்தர் பிளானுக்கு பலியான தோஸ்துகள்... கூட்டணி கட்சிகளுக்கு நைசாக தள்ளிவிட்ட ஸ்டாலின்!!
நடக்கவிருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் திமுக வீக் காக இருப்பதாக சொல்லபப்டுகிறதோ, எதிரணி ஈசியாக ஜெயிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால், மதுரை பகுதிகளில் அழகிரி ஆப்படிக்க காத்துக் கொண்டிருப்பதாலும் பெரும்பாலான தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விட்டு நைசாக ஒதுங்கி கொண்டது திமுக.
நடக்கவிருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் திமுக வீக் காக இருப்பதாக சொல்லபப்டுகிறதோ, எதிரணி ஈசியாக ஜெயிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால், மதுரை பகுதிகளில் அழகிரி ஆப்படிக்க காத்துக் கொண்டிருப்பதாலும் பெரும்பாலான தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து விட்டு நைசாக ஒதுங்கி கொண்டது திமுக.
திமுக கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட, விடுதலை சிறுத்தைகள், மதிமுக இந்திய ஜனநாயக கட்சி, முஸ்லிம்லீக், கொமதேக, 20 தொகுதிகளிலும், திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பலமான கூட்டணி என, திமுக அறிவித்தாலும், தென் மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலம் என திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு தள்ளிவிட்டுள்ளது. அதாவது மேற்கு மாவட்டங்களான சேலம்,கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, பொள்ளாச்சி, கரூர் ஆகிய, லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் நீலகிரியில் மட்டுமே திமுக நிற்கிறது.
நீலகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிற்கு வெற்றி வாய்க்கு இருப்பதால், அங்கு மீண்டும் போட்டியிட விரும்பி அதே தொகுதியை பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல பொள்ளாச்சி பாலியல் விவகாரம், தங்கள் கட்சிக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நீலகிரியில் போட்டியிட உள்ளது. மேற்கு மற்றும் கொங்கு மண்டலத்தில் அதிமுக, பாமக - பிஜேபி- தேமுதிக கட்சிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளதால் கோவையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திருப்பூரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஈரோட்டை, மதிமுகவிற்கும், நாமக்கல்லை, கொமதேகவுக்கும், கரூரை காங்கிரசுக்கும் கொடுத்துவிட்டு பெருமூச்சு விடுகிறது திமுக.
தென் மாவட்டங்களிலும் குமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் தொகுதிகள் உள்ளன.இவற்றில், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல் தொகுதிகளில் மட்டும், திமுக களம் இறங்குகிறது.
கன்னியாகுமரி,விருதுநகர், தேனி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் எதிரணிக்கு பலமான வாக்கு வாங்கி இருப்பதால் காங்கிரசுக்கும் மதுரையில் அழகிரி திமுகவை காவு வாங்குவார் என்பதால் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடாமல், திமுக ஒதுங்கிக் கொண்டது. அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ராமநாதபுரம், முஸ்லிம் லீக்கிற்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
2016 சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் தான், திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதாலும், காடுவெட்டி குரு மறைந்தது பாமகவின் பலம் குறைந்துள்ளதாலும், பாமக மீது, வன்னியர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும், வட மாவட்டங்களில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என திமுக கணக்கு போடுகிறது. மேற்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதால் கூட்டணிக்கட்சிகளை அங்கு தள்ளிவிட்டுள்ளது.
கட்சியில் அழகிரி இல்லாத நிலையில் அவரது, உள்ளடி வேலைகளுக்கு பயந்து இத்தொகுதிகளை, காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு, திமுக தள்ளிவிட்டதாக கேள்வி எழுந்துள்ளது.
திமுகவில் அழகிரி இருந்த போது, மதுரை, திருமங்கலம் உட்பட, தென் மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் ஈஸியா ஜெயித்தது. இந்த மெகா வெற்றிக்கு காரணம் அழகிரிதான் என பாராட்டி அவருக்கு, தென் மண்டல அமைப்புச் செயலர் பதவியை கருணாநிதி வழங்கினார்.
இந்நிலையில், 2011 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சிக்கு எதிரான கருத்துக் களை தெரிவித்ததால், அழகிரி நீக்கப்பட்டார். 2014 லோக்சபா தேர்தலில், திமுகவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வைகோ உள்ளிட்ட, மதிமுக, வேட்பாளர்கள், அழகிரியை சந்தித்து ஆதரவு திரட்டினர். அப்போது, திமுகவுக்கு 3 ஆம் இடம் தான் என அழகிரி, தன் கோபத்தை காட்டியதன் வெளிப்பாடாக சில தொகுதிகளில், திமுக, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமல்ல 2016ல் மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், திமுக படு தோல்வி சந்தித்தது.
இந்நிலையில், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு நைசாக தள்ளிவிட்டுள்ளது திமுக. திமுக கூட்டணியில், மதுரையில், மார்க்சிஸ்ட் நிற்கிறது. ராமநாதபுரம் முஸ்லிம் லீக் கட்சிக்கும், தேனி, சிவகங்கை, விருதுநகர் தொகுதிகள் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தின், அரசியல் தலைநகர் என கருதப்படும் மதுரையில், அதிமுக போட்டியிடவுள்ள நிலையில், திமுகவும் களம் இறங்கும் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், சுற்றியுள்ள தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு தாராளமாக அள்ளிக் கொடுத்து நஸாக கழண்டுக்கொண்டது திமுக.