அந்த 4.14 லட்சம் ஓட்டை அசாட்டா அள்ளப்போவது யார்? டீம் டீமா சுத்தி வரும் அதிமுக!! அறிக்கையில் புள்ளி வைத்த திமுக...

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  4.14 லட்சம் பேர் தபால் ஓட்டு அளிக்க உள்ளனர். அவர்களின் வாக்குகளை வாங்க திமுக தனது தேர்தல் அறிக்கையிலேயே சொல்லவிட்டது. சொல்ல மறந்த அதிமுக டீம் டீமாக அவர்களை சுற்றி வருகிறது.

DMK and ADMK Target Postal voters

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  4.14 லட்சம் பேர் தபால் ஓட்டு அளிக்க உள்ளனர். அவர்களின் வாக்குகளை வாங்க திமுக தனது தேர்தல் அறிக்கையிலேயே சொல்லவிட்டது. சொல்ல மறந்த அதிமுக டீம் டீமாக அவர்களை சுற்றி வருகிறது.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல், 18ல், தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் 19ம் தேதி துவங்கியது.  தேர்தல் பணியில், 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அவர்களுக்கு மூன்று கட்டமாக, தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  

தேர்தல் பணியில் ஈடுபடுவோர், தேர்தலுக்கு முந்தைய நாளே, அவர்களுக்கு ஒதுக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று விட வேண்டும். அவர்கள், தங்களுடைய வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது. எனவே, அவர்களுக்கு, தபால் ஓட்டளிக்க வாய்ப்பு தரப்படுகிறது. அந்த வகையில், இம்முறை, சுமார் 3.50 லட்சம் பேர், தபால் ஓட்டளிக்க உள்ளனர். 

DMK and ADMK Target Postal voters

இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும், வாய்ப்பு உள்ளது. இது போக ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் போன்ற பணிகளில் உள்ளவர்கள் மட்டும் 63 ஆயிரத்து, 77 பேர், தபால் வாக்களிக்க உள்ளனர். மொத்தமாக, 4.14 லட்சம் பேர், தபால் ஓட்டளிக்க உள்ளனர். அதுமட்டுமல்ல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களும் தபால் ஓட்டளிக்க இருக்கிறார்களாம்.

DMK and ADMK Target Postal voters

தேர்தல் பணியில் ஈடுபடும் அவர்களுக்கு, மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில், தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.  ஜாக்ட்டோ ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மறுத்து விட்டது. இதனால், அவர்கள் கோபத்தில் உள்ளனர். எனவே, அவர்களின் ஓட்டுகள், தங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கையில், திமுக கூட்டணி உள்ளது. அதனால், இவர்களை டார்கெட் பண்ணியே, திமுக தன் தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தேர்தல் பணியில் ஈடுபட்டு, தபால் ஓட்டு போட உள்ளவர்களை அணுகி, அவர்களின் ஓட்டுகளை, ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் தெரிந்த அதிமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களின் பெயர் பட்டியலை பெற்று, ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து பேசி வருகிறார்களாம்,  தபால் வாக்குகளை பெறவே டீம் டீமாக செயல்படுகிறதாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios