தேமுதிகன்னு ஒரு கட்சியே இருக்கக்கூடாது... மிச்சம் மீதியை மொத்தமாக காலி பண்ண பிளான்!! அதிர்ச்சியில் பிரேமலதா!

திமுகவை தாறுமாறாக விமர்சித்தது மட்டுமல்ல மூத்த தலைவராக இருக்கும் துரைமுருகனை வேறு கடுமையாக விமர்சித்துள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. இதனால் கடுப்பான திமுக தேமுதிகவுக்கு பாடம் புகட்டும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் ரகசிய முயற்சியில் இறங்கியுள்ளதாம்.

DMK Action against DMDK

திமுகவை தாறுமாறாக விமர்சித்தது மட்டுமல்ல மூத்த தலைவராக இருக்கும் துரைமுருகனை வேறு கடுமையாக விமர்சித்துள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. இதனால் கடுப்பான திமுக தேமுதிகவுக்கு பாடம் புகட்டும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் ரகசிய முயற்சியில் இறங்கியுள்ளதாம்.

நடக்கவுள்ள நாடாளுமன்ற மற்றும் இடைத் தேர்தலில், அதிமுக -  பிஜேபி  கூட்டணியில் இணைய, தேமுதிக  பேச்சு நடத்தியது, கேட்டது கிடைக்காததால்  இழுபறி நீடித்தது. விஜயகாந்தை சந்தித்து, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், உடல் நலம் விசாரித்தார்.  தேமுதிகவும் இதான் சமயமென நினைத்து கூட்டணி டீயில் பேசியது. தேமுதிகவின், தனிப்பட்ட கோரிக்கைகளை, திமுக மற்றும் அதிமுகவில் அதிக இடங்கள்  மற்றும் தேர்தல் செலவுக்கு காசு என பேரம் நடத்தியது. ஆனால் செல்ப் எடுக்கவில்லை.  இந்த சமயத்தில் தான் தேமுதிகவிலிருந்து ஒரு கூட்டம் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்திக்க வீடு தேடி வந்தது. ஆனால் அவரோ தலைவர் ஊரில் இல்லை, கொடுக்க சீட்டும் இல்லை என வெறும் கையேடு திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல் மீடியாவில் தேமுதிகவின் சுயரூபத்தை கிழித்து தொங்கவிட்டார்.

DMK Action against DMDK

இதனால் மனம் நொந்துப்போன பிரேமலதா அண்ட் சுதீஷ்  'தில்லுமுல்லு கட்சி' என, காரசாரமாக விமர்சித்தார். இதனால், இரு தரப்பினர் இடையேமோதல் வெடித்தது. இந்த விவகாரங்களால், தேமுதிக மீது, அறிவாலய தலைமை, கடும் கோபத்தில் உள்ளது.அதனால், தேமுதிகவை சேர்ந்த, முக்கிய பிரமுகர்களை இழுக்கும் முயற்சியை துவக்கி உள்ளது. பிரேமலதா, சுதீஷ் ஆதிக்கம் பிடிக்காமல், முக்கிய நிர்வாகிகள் சிலர், ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு வலை விரிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

திமுக போட்ட தரமான ஸ்கெட்ச்சில் பக்காவாக வந்து விழுந்துள்ளதாம் சில முக்கிய புள்ளிகள், சேலத்தை சேர்ந்த மாநில நிர்வாகியும், விழுப்புரம், சென்னை மாவட்டங்களை சேர்ந்த, மாவட்ட நிர்வாகிகளும் சிக்கியுள்ளார்களாம். இது போக விழுப்புரம், வடசென்னை தொகுதிகளில், பிரசாரத்திற்கு ஸ்டாலின் செல்லும்போது, இவர்களை கட்சியில் இணைக்க திமுக  திட்டமிட்டுள்ளது.

DMK Action against DMDK

கடந்த 2016 சட்டசபை தேர்தல் சமயத்தில், தேமுதிகவை, திமுக பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தது. எப்படியாவது ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தது. ஆனாலும், அக்கட்சி மசியாமல், கருணாநிதி அழைப்பை மதிக்காமல், மக்கள் நல கூட்டணியில் போய் சேர்ந்தது. அந்த தேர்தலில் மநகூ மண்ணைக் கவ்வியது அதுமட்டுமல்ல பெரும்பாலான தொகுதிகளில் வெகு குறைவான வாக்குவித்தியாசத்திலேயே வெற்றிவாய்ப்பை இழந்து  ஆட்சி அமைக்க முடியாமல் போனது திமுக.

அப்போதே தேமுதிகவை உடைத்தது. அந்த முயற்சியின் பலனாக  தேமுதிகவை சேர்ந்த, அப்போதைய,MLAக்கள், சந்திரகுமார், சேகர், பார்த்திபன் ஆகிய மூவரை, தங்கள் பக்கம் இழுத்தது. அவர்கள் வாயிலாக, தேமுதிகநிர்வாகிகள் சிலரும், திமுக பக்கம் வரவழைக்கப்பட்டனர். அப்போதே, திமுக சார்பில் போட்டியிட வந்தவர்களுக்கு வாய்ப்பும் அளித்தது. 

DMK Action against DMDK

இது நடந்து நான்கு ஆண்டு நெருங்கும்  நிலையில் தேமுதிகவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.  அதாவது மீண்டும் மிச்சம் சொச்சம் இருக்கும் தேமுதிகவை சிதைத்து சின்னாபின்னமாக்க முயற்சி நடந்து வருகிறதாம்.  கட்சியின் நிலைமை மிகவும் மோசமான சூழலில் இருப்பதாலும்,  கேப்டனும் ஆக்டிவாக இல்லாததாலும், திமுக முயற்சியை முறியடிப்பது எப்படி என முழிக்கிறதாம். உதவி கேட்டு கூட்டணி கட்சிகளிலும் கையேந்த முடியாது,  எனவே தேர்தலை சந்திக்கும் முன்பாக, அதிருப்தியில் உள்ள மசெக்களை  சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் பிரேமலதா.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios