அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளுக்கு உள்ளூரில் நமக்கெதற்கு வம்பு என போட்டியிட முன்வராததால் வேறு வழியில்லாமல் தலைமையில் இருக்கும் மூன்று பேர் களமிறங்கியுள்ளனர்.

அதிமுக கூட்டணியில், தேமுதிகவிற்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கள்ளக்குறிச்சியில் போட்டியிட, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் விருப்பம் தெரிவித்தார். மற்ற தொகுதிகளில் கட்சியினர் யாரும் போட்டியிட விரும்பாததால், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என தத்தளித்த தலைமை, வேறு மாவட்ட நிர்வாகிகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. 

கள்ளக்குறிச்சியில் சுதீஷ்; வடசென்னையில் அழகாபுரம் மோகன்ராஜ், திருச்சியில் டாக்டர் இளங்கோவன், விருதுநகர்யில் அழகர்சாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, வடசென்னை தொகுதிகளில், திமுகவுடனும், விருதுநகர், திருச்சி தொகுதிகளில், காங்கிரசுடனும் தேமுதிக மோதுகிறது.

விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் கள்ளக்குறிச்சியில் களம் காண உள்ளார்.  இவர், 2009, லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சியில், 1.32 லட்சம் ஓட்டுகள் பெற்று, தோல்வியடைந்தார். ஏற்கனவே தோற்ற கள்ளக்குறிச்சியில் சுதீஷ் மீண்டும் நிற்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, இத்தொகுதியின், திமுக வேட்பாளர். எனவே, தேமுதிக வேட்பாளராக பிரேமலதா அல்லது  வெங்கடேசன் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அங்கு எதிரணியில் நிற்பது பொன்முடி மகன் வெயிட்டு கை, தாறுமாறாக செலவு செய்வார்கள் அங்கு போட்டியிட்டு தோற்றுப்போனால் நம்மை சொந்த கட்சியினரே மதிக்கமாட்டார்கள் என்பதால் பிரேமலதா விருப்பம் காட்டவில்லை, வெங்கடேசன் நமக்கு எதற்கு வம்பு என நைசாக கழண்டுக்கொண்டதால் சுதீஷ் தலையில் கட்டிவிட்டார் பிரேமலதா.

அழகாபுரம் மோகன்ராஜ் வடசென்னை தொகுதியின் அதிமுக பிஜேபி கூட்டணியின் வேட்பாளர். சேலத்தை சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜ், 2009 ல், சேலம் தொகுதியில் படு தோல்வியை சந்தித்தார்.  2011 ல், சேலம் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். அதிமுக வடசென்னையை தலையில் காட்டியதால் அங்கு சந்து போது என எங்கு தேடியும் ஒருவரும் கிடைக்காததால், தலைமை கெஞ்சி கூத்தாடி போட்டியிட வைத்துள்ளது.

டாக்டர் இளங்கோவன்  திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் இளங்கோவன், 2009 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார். கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில், தர்மபுரி நகராட்சி சேர்மன் வேட்பாளர், 2016ல், தர்மபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு அங்கும் படு தோல்வியடைந்தார். இந்நிலையில் திருச்சியில் வேட்பாளராக போட்டியிட கட்சியினர் யாரும் முன்வராததால் வேறு வழியில்லாமல் கட்சியே கைக்காசு போட்டு செலவு செய்வதாக சொல்லி இவரை நிறுத்தியுள்ளது. 

இப்படி, 4 தொகுதிகளில், 3 தொகுதிகளில் வேட்பாளர்களை வேறு இடத்திலிருந்து கூப்பிட்டுக்கொண்டு வந்துள்ளது தேமுதிகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியின் தேமுதிக வேட்பாளராக ஆர்.அழகர்சாமி நிற்க உள்ளார்.  அழகர்சாமி தெலுங்குச்செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்,  திருப்பரங்குன்றத்தில் கழிவு பஞ்சு வியாபாரம் பார்த்து வருகிறார்.   1987-ல் விஜயகாந்த் ரசிகர் மன்ற கிளை துணை செயலாளராக இருந்திருக்கிறார்.  விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததி லிருந்து  படிப்படியாக அக்கட்சியில் பொறுப்புக்களை ஏற்று, தற்போது கழக விசாரணைக்குழு உறுப்பினராக இருக்கும் இவர் மட்டுமே அந்த தொகுதியில் நிற்க உள்ளார்.