அதிமுகவுக்கு கூட இதுக்கு அர்த்தம் தெரியாது... ஆனா எங்க அண்ணி சொல்லிட்டாங்க!! கெத்து காட்டும் தேமுதிகவினர்...
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு கூட்டணிக் காட்டிச்சியினர் மத்தியில் ஹைலைட், அதிலும் அவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டு, எங்க அண்ணியார் எப்படி தீயா இருக்காங்க, பக்கா விளக்கம் சொல்றாங்க என தேமுதிகவினர் கெத்து காட்டுகின்றனர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் எப்போதுமே இருவிரல் காட்டுவார்கள். இதில் என்ன இருக்கிறது? வி என்ற கேப்டனோட பெயர் அடங்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல இதில் வெற்றி என்பதும் அடங்கியிருக்கிறது.
விருதுநகர் ஊர் பெயரிலும் முதல் எழுத்து வி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சிக்கலைஞர் கேப்டன். இவர்கள் மூன்று பேருமே சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து மிகப்பெரிய தலைவர்கள் ஆனவர்கள் தன். எனக்கு இந்த மூன்றுபேரும் ஒரேமாதிரிதான் தெரிவார்கள்.
ஜெயலலிதாவைப் போலவே, கேப்டனும் யாருக்கும் பயப்பட மாட்டார். தன் மனதில் உள்ளதை தைரியமாகப் பதிய வைப்பவர். ஜெயலலிதா மிகவும் தைரியமானவர், தைரியம் இருந்தால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதற்கு அவங்க ரெண்டு பேருமே இருந்தாங்க. ஜெயலலிதாவும் கேப்டனும் சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர்கள். மக்கள் முன் நடிக்கத் தெரியாதவர்கள் என்றார்.
இத்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு இணையாக விஜயகாந்த்தையும் விட்டுக்கொடுக்காமல் பிரேமலதா பாராட்டிப் பேசியது, அதிமுகவினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.