அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் என உச்சநீதிமன்றம் உத்தரவாதம் கொடுத்துள்ளதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத் தேர்தல் சமயத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு இருந்த காரணத்தால்,  உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது. அதே சின்னத்தை தான் மீண்டும் கேட்கிறோம் என  தரப்பு கோரிக்கை வைத்தது. பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரநிதித்துவ சட்டப்படி முரணானது, பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சுயேட்சை வேட்பாளருக்கான சின்னத்தை பெற்றுக்கொள்ளுங்கள். டிடிவி தினகரன் தரப்புக்கு தனி தனி சின்னம்தான் தர முடியும்; பொதுசின்னம் தர முடியாது என தேர்தல் ஆணியம் திட்டவட்டமாக கூறியது.  தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே? ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். ஆனால், அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொது சின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆணையம் சொன்னது.

இறுதியில் இது குறித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமமுக பதிவு செய்யப்படாத அரசியல் கட்சியாக இருப்பதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார்.  ஆனால்  59 வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த தினகரன்.  தங்களுக்கு ஒருவேளை பொதுச்சின்னம் ஒதுக்கப்படாவிட்டால், அனைத்து அமமுக வேட்பாளர்களும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்தார். தீர்ப்பு எதிர்பாத்த மாதிரி வராததால், எந்த சின்னம்கா இருந்தாலும் பரவாயில்லை அதிலே நின்று நாம யாருன்னு காட்டுவோம் என சொன்ன அவர், மொத்தம் உள்ள 59 வேட்பாளர்களையும் தொலைபேசியில் அழைத்து பிற்பகல் 2 மணிக்கு  முன்பு மனுதாக்கல் செய்ய சொல்லியிருக்கிறாராம்.