தேர்தலில் போட்டியிடுவதாக நாடகமாடி, எங்க பணத்தை தீபா சுருட்டிட்டாங் என விருப்ப மனு அளித்த நிர்வாகிகள் புலம்பித் தவிக்கின்றனர்.

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்பபோவதாக சொல்லி விருப்பமனு விநியோகம்  செய்து, நேர்காணல் நடத்தினார் பின்னர்  ஒரே நாளில் தனது கணவருடன் பேட்டியளித்த தீபா  தனித்துப் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக. கூட்டணிக்கு எம்ஜிஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு அளிக்கிறது.  அதிமுக. எதிர்கால நலன் மற்றும் வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது என தனது கட்சி தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்தார்

இதுகுறித்து பேசிய தீபா பேரவை செயலாளர் ஒருவர், தனித்துப் போட்டியிடப்போவதாக தீபா அறிவித்ததால், பேரவையிலுள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும்,  தி.நகரிலுள்ள பேரவையின் தலைமையகத்தில் விருப்பமனு அளித்தோம். ஆண்களுக்கு 5,000 ரூபாய், பெண்களுக்கு 2,000 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 160 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், திடீரென தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தீபா அறிவித்தார். 

அதிமுக தொண்டர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் காரணம் கூறினார். பிறகு எதற்காக விருப்பமனு வாங்கினார் என்பது இதுவரை எங்களுக்குக் காரணம் புரியவில்லை. 

இந்நிலையில், எங்களிடம் வாங்கிய விருப்பமனு கட்டணம் ஏறத்தாழ 7 லட்சம் ரூபாயைத் திருப்பி அளிக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால், பொறுத்திருங்கள். சரியான நேரத்துல உங்க பணம் வந்து சேரும் என்கிறார்கள், இப்படி தேர்தல் நாடகமாடிய, தீபா எங்கள் பணத்தை சுருட்டிவிட்டதாகத் தெரிகிறது என மனம் நொந்து புலம்புகிறார்கள்.