அரசியல் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து தொகுதிகளை பிரித்துக்கொண்டு, வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்திற்க்கே நாள் கிறித்துள்ள நிலையில், அம்மா தீபா பேரவை பொதுச்செயலரான தீபா, 'நானும் அரசியல்வாதி தான்...'  நாங்கள் இல்லாமல் தேர்தலா, நாங்களும் அமைப்போம்ல மெகா கூட்டணி என அல்லு சில்லு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டராட்த்தில் கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

ஜெயலலிதா மறைந்ததும் அவர் வெற்றிபெற்ற  RKநகர் இடைத்தேர்தலில், போட்டியிட முடியாத வகையில், சிலர் சதி செய்தது போல, இந்த தேர்தலிலும் சதி செய்து விடக்கூடாது என்பதில், ரொம்பவே உஷாராக இருக்கிறாராம் தீபா. நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும், இம்முறை தீபா பேரவை அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. ஆனால் அதற்கு, டப்பு பார்ட்டிகளை  வளைத்துப் போடுவதில் தான் சிக்கல் நீடிக்கிறது. இருந்தாலும், மனம் தளராத தீபா, தேர்தல் வேலையில், பிசியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்.

அதிமுக - திமுக கூட்டணிக்கு மாற்றாக அறிக்கை விட்டு, 'மெகா' கூட்டணியை அமைக்க பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், 'எங்களுடன் இணைந்து, கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஆர்வமுள்ள, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஆர்வமுள்ள கட்சிகள், துணை பொதுச்செயலரான மாதவனை, நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என, தெரிவித்துள்ளார். இதை கேள்விபட்டு, இருக்கிற தேர்தல் வேலைல பிசியா இருக்குற இந்த நேரத்துல இந்தம்மா வேற காமெடி பண்ணிக்கிட்டு என, அதிமுகவினர் கலாய்க்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, தீபா கட்சி ஆரம்பித்த சில நாட்களில் தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. அதனால் தீபா, மாதவனை வீட்டை விட்டு வெளியேறிய  தீபாவின் 'எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை'யில் இருந்து மாதவன் விலகி “எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்” ஆரம்பித்த மாதவன் எப்படி கட்சியின் துணை பொதுச்செயலாளராறான் என கேள்விகள் எழுப்பி வருகின்றனர் மாதவன் கட்சியை சேர்ந்தவர்கள்.