ஆரணி தொகுதியில் ஜெயிக்கப்போவது யார்? ஐந்து வருட சாதனையின் அசால்ட் ரிசல்ட்

ஆரணி தொகுதி சிட்டிங் எம்பி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதால் சேவல் ஏழுமலையை தனது சொந்த ஊரில் உள்ள, சொந்த கட்சியிலுள்ள ரத்தத்தின் ரத்தங்கள் வெச்சு செய்ய காத்திருக்கிறது. கடந்த ஐந்து வருஷமாக ஒண்ணுமே செய்யாமல் சும்மாவே இருந்ததால்  சீட் கொடுப்பார்களா என அதிமுகவினரே யோசிக்கும் அளவிற்கு தொகுதியின் நிலைமை படுமோசமாக இருக்கிறது.

Arani lok sabha constituency Survey Result

ஆரணி தொகுதி சிட்டிங் எம்பி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதால் சேவல் ஏழுமலையை தனது சொந்த ஊரில் உள்ள, சொந்த கட்சியிலுள்ள ரத்தத்தின் ரத்தங்கள் வெச்சு செய்ய காத்திருக்கிறது. கடந்த ஐந்து வருஷமாக ஒண்ணுமே செய்யாமல் சும்மாவே இருந்ததால்  சீட் கொடுப்பார்களா என அதிமுகவினரே யோசிக்கும் அளவிற்கு தொகுதியின் நிலைமை படுமோசமாக இருக்கிறது.

ஆரணி தொகுதி ஒன்றும், செல்வந்தர்கள் வாழும் தொகுதியல்ல, சுமார் 85 சதவீத நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் வாழும் தொகுதி, விவசாய மக்களும், பட்டு தொழிலும் ஆரணி பகுதிகளில் அதிகமாக நடக்கிறது.

இந்த தொகுதியில் கடந்த 5  வருஷமா யார் தான் எம்.பி என தெரியாமலேயே இருக்கின்றனர், இந்த தொகுதி மக்கள்.  அது ஏன் அந்த தொகுதியில் இருக்கும் கட்சிக்காரர்களுக்கே  தெரியாது. கட்சிக்காரர்களுக்கே இந்த கதியென்றால் அந்த தொகுதி மக்களுக்கு சொல்லவா வேணும்? நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், அந்த எம்பி எப்படிப்பட்டவர் என்று.சரி அவரோட சிறப்பான செயல்பாடுகள் என்ன?

Arani lok sabha constituency Survey Result

2008ம் ஆண்டு நடந்த தொகுதி சீரமைப்பின்போது, வேலூர் மக்களவை தொகுதியில் இருந்த ஆரணி சட்டமன்ற தொகுதியை பிரதானமாக கொண்டு வந்தவாசி தொகுதி கலைக்கப்பட்டு அதற்கு பதில் அத்தொகுதியின் சில பகுதிகளையும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் ஆரணி மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. 

தொகுதி மறுவரையறையில் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 2009-ம் ஆண்டு தேர்தலை சந்தித்த ஆரணி தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரான எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக-வின் சேவல் ஏழுமலை திமுக-வின் ஆர்.சிவானந்தத்தை தோற்கடித்தார். சிவானந்தம், திமுக மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். 

இந்த தொகுதியில், தொழில்வளத்தை பொறுத்தவரை செய்யாறு தொழிற்பேட்டை, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆரணி பட்டு விசைத்தறி கூடங்கள், ஆரணி, செஞ்சி, செய்யாறு, களம்பூர், போளூர் பகுதிகளில் நிறைந்த நெல், அரிசி ஆலைகள், வந்தவாசி கோரைப்பாய் நெசவு கூடங்கள் என நிறைந்திருந்தாலும், தொழில்வளம் என்பது குறைவுதான். 

ஆரணியில் பட்டு தொழில் பூங்கா அமைத்து இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாடைகளை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் பட்டுத்தொழில் பூங்கா வர வேண்டும் என்ற ஆரணி மக்களின் நீண்டநாள் கோரிக்கை கடந்த 5 ஆண்டுகளிலும் கண்டுகொள்ளப்படவில்லை.

Arani lok sabha constituency Survey Result

2004ம் ஆண்டு எம்பியாகவும், ரயில்வே இணைஅமைச்சராகவும் இருந்த ஆர்.வேலுவால் பரிந்துரைக்கப்பட்டு தொடங்கப்பட்ட புதிய ரயில் பாதை திட்டம் நிதி ஒதுக்கீட்டை செய்யாததால் முடங்கிய நிலையில் உள்ளது.    இத்திட்டத்தையும் 5 ஆண்டுகளில் பொறுப்பில் இருந்தவர் ஏழுமலை கண்டுகொள்ளவில்லை. அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்  திட்டம் கண்டுகொள்ளாமல் இருப்பது, செஞ்சி கோட்டை, மயிலம் சுப்பிரமணியசுவாமி கோயில், திருமலை குகைக்கோயில்கள், தென்னாங்கூர், ஆவணியாபுரம், வந்தவாசி கோட்டை என  சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தது.  அதேபோல நெல் சாகுபடி பரப்பும், அரிசி ஆலைகளும் அதிகம் என்பதால் நெல் சேமிப்பு கிடங்கு, அதேபோல் நெல் அரிசிக்கு சிறப்பு பொருளாதார ஏற்றுமதி மையம் வேண்டும்  விவசாயிகளின் கோரிக்கையும் வீணா போனது.

ஒண்ணுமே செய்யாமல் சும்மா இருந்தாலே சீட் கொடுப்பாங்களா?

தொகுதிக்குள் ஆரணி, செய்யாறில் கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் மணல் கொள்ளை காவல்துறை, வருவாய்த்துறை, அரசியல்புள்ளிகளின் துணையுடன் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக தொகுதி எம்பியான ஏழுமலை கண்டுகொள்ளவில்லை,இப்படி கடந்த ஐந்து வருடமாக ஒண்ணுமே செய்யாமல் தண்டமாக, பேருக்காக எம்பி பதவியை வைத்துக்கொண்டு வீட்டிலேயே அடை காக்கும் நம்ம  சேவலுக்கு எப்படி சீட் கொடுத்தாங்க? எம்பி செஞ்சி சேவல் ஏழுமலையின் சொந்த ஊர் விழுப்புரம் அடுத்த அன்னமங்கலம். எம்பியாகி அரசு நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டில் தலைகாட்டுவதுடன் சரி அதுவும் அன்றைய மனநிலையை பொறுத்தே கலந்து கொள்வாராம். தொகுதி பக்கமும் 5 ஆண்டுகளாக எட்டிப்பார்க்கவில்லை ஆனால், மீண்டும் சீட் கொடுத்தாங்க என அதிமுகவினர் ரூம் போட்டு யோசித்து வருகிறார்களாம். 

Arani lok sabha constituency Survey Result

வெறித்துப் பார்க்கும் கிராம மக்கள், சோகத்தில் அதிமுகவினர்: 

இவர் தான் கடந்த 5 வருஷம் MPயா இருந்தாருன்னு இவர் சொன்னாதான் மக்களுக்கே தெரியும். அந்தளவுக்கு தான் இவருக்கும் இவர் இருந்துள்ளார். மக்களுக்கும் இவருக்கும் தொடர்பே இருந்ததே இல்லை, செஞ்சி, செய்யார் ஆகிய இரண்டு தொகுதியில் தான் இவரை எப்பவாவது பாக்க முடியும். மத்தப்படி எந்த அரசு நிகழ்ச்சி, கட்சிக்காரன் வீட்டு விசேஷம், துக்கம் எதுக்கும் மனுஷன் தலய காட்டவே மாட்டாரு. இவருக்கு சீட் கொடுத்ததும் பதிலா கூட்டணிக்கு இந்த தொகுதியை அறிவிச்சிருந்தா நாங்களே சிறப்பா வேல பார்த்து ஜெயிக்க வைப்போம், இவருக்காக தொகுதிக்குள்ள ஒட்டு கேட்க அழைச்சிட்டுப் போனால் மக்கள் வெறித்துப் பார்ப்பதாக அதிமுகவினரே சொல்கின்றனர்.

வெயிட்டான வேட்பாளர் 

மக்களின் வெறுப்பால் நொந்துப்போன அதிமுகவினரிடம், செஞ்சி சேவல் ஏழுமலை நான் தவறு செய்து விட்டேன்  என ஒட்டு கேட்க மக்களிடம் சாவதற்கு முன்பாக தனது கட்சிக்காரர்களிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கெஞ்சி கூப்பிட்டு செல்கிறாராம். இந்த தொகுதியை அசால்ட்டா ஜெயிக்கும் விதமாக ஒரு வெயிட்டான வேட்பாளரை நிறுத்த பிளான் போட்டது திமுக, ஆனால் டாக்டர் விஷ்ணுபிரசாத் தானே அந்த தொகுதியில் போட்டியிடும் விருப்பத்தை ஸ்டாலினிடம் சொன்னதால், காங்கிரஸ்க்கு கொடுத்துள்ளாராம்.

இவரது தந்தை கிருஷ்ணசாமி, ஏற்கனவே எம்பியாக இருந்தவர். அதோடு  அன்புமணியின் மைத்துனர், அதாவது அன்புமணி மனைவியின் தம்பிதான் இந்த விஷ்ணு பிரசாத். கூட்டணியில் பாமக இருந்தாலும், வன்னியர் வாக்குகள் அப்படியே அன்புமணியின் மைத்துனருக்கே மொத்தமாக விழுமாம், இது போக தினகரனின் அமமுக  செம்ம வெயிட்டாக கிராமங்களுக்கு கிராமம் கிளைகளை ஆரம்பித்து, பரபரப்பாகவே இருக்கிறது. கிராமப்புறப் பகுதிகளில் வரவேற்பு இல்லாததால், சேவல் ஏழுமலை சோர்ந்து போயுள்ளார். அமமுக சார்பில் அமைச்சர் ஜி.செந்தமிழன் நிறுத்தப்பட்டிருக்கிறார். காங்கிரஸ், அதிமுக, அமமுக ஆகிய 3 வேட்பாளர்களுமே வன்னியர் சமூகத்தினர்தான்.

Arani lok sabha constituency Survey Result
 
இந்த தொகுதியில் முதலியார் வாக்குகள், அவர்களுக்கு அடுத்த படியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாக்குகள். இந்த பகுதியில் சாதி வாக்குகள்தான் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதாக உள்ளன. அப்படிப்பார்த்தால் கூட்டணியில் உள்ள விசிக வாக்கும் அப்படியே டாக்டர் விஷ்ணுபிரசாத்துக்கு விழும்,  அதிமுக, பிஜேபி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளது ஒரு பக்கம் இருந்தாலும், சேவல் ஏழுமலையை பார்த்தே ஐந்து வருடம் ஆச்சாம், டிவியில கூட பாக்கலையாம், ஆனால் எப்படியோ சீட் வாங்கியதால் ஒட்டு கேட்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால், ஐந்து வருடத்திற்கு பின் மீண்டும் தொகுதி பக்கம் போகும் கொடுமைக்கு ஆளாகியுள்ளாராம், இதனால் முக்கிய 3 வேட்பாளர்களில் செஞ்சி சேவல் ஏழுமலை தான் அடிக்கும் வெயிலின் தாக்கத்தைவிட வேதனையில் உள்ளாராம்.

அதிமுக வாக்குகளை அப்படியே தினகரன் கட்சி வாங்கிவிடும், பாமக வாக்கு வங்கி அன்புமணியின் மைத்துனருக்கு பல்க்கா விழும், தேமுதிக வாக்கு வங்கி சிதறும் இப்படி இருக்கையில் திமுக வாக்கு வங்கி, பாமக வாக்கு வங்கியை வாங்கும் திமுக கூட்டணியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்  ஜெயிப்பார் என தொகுதி மக்களே சொல்கிறார்கள். அமமுக சார்பில் நிறுத்தப்படுபவர் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவராக இருந்தாலும்,  தினகரனின் அமமுக அதிமுக வாக்குகளை பிரிக்கும். அதனால் அமமுக செயல்பாடும் திமுக கூட்டணிக்கே சாதகமாகும் என்பதுதான் களநிலவரம். ஆனால், விஷ்ணுபிரசாத் கூட்டணி கட்சியினருடன் சரியான நட்பு பாராட்டாததால் கொஞ்சம் அதிருப்தி இருப்பது உண்மை தான், ஆனால் அவர்களுக்கு டாக்டர்.விஷ்ணுபிரசாத்தை விட்டால் வேறு வழியில்லை என்பதால் வெல்லப்போவது திமுக கூட்டணிதான் என உறுதியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios