ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுகவில் நிறுத்திபட்டவர் தான் செஞ்சி ஏழுமலை,  இவர் கடந்த 5 ஆண்டு காலம் இதே ஆரணி தொகுதி எம்.பியாக இருந்தவர், ஆனால் இவர்தான் கடந்த 5 வருஷமா எம்பியாக இருந்தாருன்னு அன்த்த தொகுதி மக்களுக்கே இப்போதான் தெரியுமாம்.

இன்று காலை  சொந்த கட்சியினர் மற்றும் கூட்டணியில உள்ள பாமக, தேமுதிக, பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் ஆரணி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எங்களை முறையாக அழைக்கவில்லையென கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தை புறக்கணித்துவிட்டது.

அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் ஏழுமலை, நான் கடந்த 5 ஆண்டு காலம் எம்.பியாக இருந்தேன். அப்போது நான் செய்த தவறுகள் ஏதாவது இருப்பின் என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் அப்படியொரு தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன், எனக்கு தேர்தல் வேலைப்பார்த்து, என்னை தேர்தலில் வெற்றி பெற வையுங்கள் என கூடியிருந்த கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.

இவர் தான் கடந்த 5 வருஷம் MPயா இருந்தாருன்னு இவர் சொன்னாதான் மக்களுக்கே தெரியும். அந்தளவுக்கு தான் இவருக்கும் இவர் இருந்துள்ளார். மக்களுக்கும் இவருக்கும் தொடர்பே இருந்ததே இல்லை, செஞ்சி, செய்யார் ஆகிய இரண்டு தொகுதியில் தான் இவரை எப்பவாவது பார்க்க முடியும். மத்தப்படி எந்த அரசு நிகழ்ச்சி, கட்சிக்காரன் வீட்டு விசேஷம், துக்கம் எதுக்கும் மனுஷன் தலையை காட்டவே மாட்டாராம்.

இவரை வேட்பாளரா அறிவிச்சதுக்கு பதிலா கூட்டணிக்கு இந்த தொகுதியை அறிவிச்சிருந்தா நாங்களே சிறப்பா வேல பார்த்து ஜெயிக்க வைப்போம் என அதிமுகவினர் புலம்புகிறார்களாம். இவரை தொகுதிக்குள்ள அழைச்சிட்டுப் போனாளே மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பாங்க, என்ன செய்யறதுன்னே தெரியல என புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.