பேசியே வளர்ந்தவைதான் திராவிட இயக்கங்கள். ஆனாலும் முன்பெல்லாம் அக்கட்சி நிர்வாகிகள் தடாலடியாக பில்ட் அப் செய்து ஒரு ஸ்டேட்மெண்டை தட்டிவிடுவதற்கு ரொம்பவே தயங்குவார்கள். காரணம்? அது நிஜமாகவில்லை என்றால், மக்களின் முகத்தில் விழிக்க முடியாதே? என்கிற பயம். 

ஆனால் இப்போதெல்லாம் எந்த கவலையும், பயமும், தயக்கமும் இல்லாமல் இஷ்டத்துக்கு அடித்து நொறுக்கி அள்ளிவிடுகின்றனர் டயலாக்குகளை. அதில் அ.ம.மு.க. எந்த குறையும் வைப்பதில்லை. அதிலும் குறிப்பாக அக்கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளரான தங்கத்தமிழ்செல்வன் எப்போதுமே ஏதோ ஒரு பெரிய பில்ட் - அப்பை கையில் ஸ்டாக் வைத்துக் கொண்டேதான் மீடியாவுக்கு முகம் காட்டுகிறார். நடக்குமோ இல்லையோ என்று எதையும் யோசிப்பதில்லை, தன் இஷ்டத்துக்கு அடித்துவிடுகிறார் ஸ்டேட்மெண்டை. 

அந்த வகையில் லேட்டஸ்டாக தங்கதமிழின் தடாலடி தாராளா டயலாக்குகளின் அணிவகுப்பு இதோ! வாசிக்கும் உங்களுக்கு கண்கள் புளித்துப் போனால் கம்பெனி பொறுப்பல்லைங்கோ!...

 

*    முயல் - ஆமை கதையில், ஆமை ஜெயித்தது போல் நாங்கள் இரு பெரும் திராவிட கழகங்களின் கூட்டணியையும் அடித்து நொறுக்கிவிட்டு ஜெயிக்கப்போவது உறுதி. 

*    எங்களின் பலத்தை அறிந்த தேசிய கட்சிகளான பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் இரண்டும் எங்களுடன் கூட்டணிக்கு முயன்றன. ஆனால் நாங்கள்தா தவிர்த்துவிட்டோம்.

*    எங்களைப் பார்த்து அதிகமாக பயப்படுகிறது அ.தி.மு.க. அந்தப் பயத்தை மறைப்பதற்காகத்தான் வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டுகிறார்கள். (அத நீஙக் சொல்றீங்க?)

*    இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒரு அரசியல் அதிசயம் தமிழகத்தில் நிகழப்போகிறது. 

*    சின்னம்மாவுக்கு அ.தி.மு.க.வின் இந்த கூட்டணி பிடிக்கவில்லை. ‘மிக மோசமாக தோற்பார்கள்’ என்று அவர் விடுத்திருக்கும் சாபம் நிச்சயம் பலிக்கும். 

*    தேர்தலுக்குப் பிறகு நாங்கள் சென்னையில் இருக்கமாட்டோம், பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இருப்போம். 

*    சசிகலா முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்புகள் உள்ளன! என்று கூறப்படுவதை மறுப்பதற்கில்லை. 

*    தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.கவிலிருந்து பல வி.ஐ.பி.க்கள் எங்களிடம் வந்து சேர்வார்கள், இப்போதே விருப்பம் தெரிவிக்க துவங்கிவிட்டனர்...என்று வஞ்சனையே இல்லாமல்  எடுத்துவிட்டிருக்கிறார். 

குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இதில் ஏதாவது ஒன்று பலித்தாலும் கூட அப்புறம் தங்கத்தை கையில் பிடிக்க முடியாது!
அவ்வ்வ்வ்....