அன்புமணியை தோற்கடிக்க பக்கா பிளான்... அசத்தலா ஸ்கெட்ச் போட்ட அந்த நாலு பேரு! அரசியல் வட்டாரத்தை அலறவிட்ட பரபரப்பு...

அன்புமணியின், நக்கல் பேச்சு காரணமாக, திமுகவின், அதிகார மையங்கள் கடுப்படைந்து உள்ளன.தர்மபுரி தொகுதியில் அன்புமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, திமுக வேட்பாளராக அதே சமூகத்தைச் சேர்ந்த செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

Anbumani suffered on DMK Plan

அன்புமணியின், நக்கல் பேச்சு காரணமாக, திமுகவின், அதிகார மையங்கள் கடுப்படைந்து உள்ளன.தர்மபுரி தொகுதியில் அன்புமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, திமுக வேட்பாளராக அதே சமூகத்தைச் சேர்ந்த செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரியில், அன்புமணியை வீழ்த்த, திமுக, தரப்பில் வியூகம்    வகுக்கப்பட்டுள்ளது. அதாவது அன்புமணிக்கு கிடைக்கும், வன்னிய சமுதாய ஓட்டுகளை பிரிப்பதற்கும், திமுக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அன்புமணியின் வெற்றி பெறுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

இது மட்டுமின்றி, பிரசாரத்தில் அன்புமணியை அதிகமாகவே, திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் மகன் உதயநிதி, வன்னிய சமுதாய தலைவர்களும், அன்புமணிக்கு எதிரான பிரசாரத்தில் தீவிரம் காட்டுகின்றனர். இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் திமுக தலைமை மீது அன்புமணி கடும் கோபத்தில் உள்ளார். 

Anbumani suffered on DMK Plan

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய அன்புமணி, 4 சின்ன பசங்களை நம்பி, திமுக தலைமை, கட்சி நடத்துகிறது என்று நக்கலடித்துள்ளார். ஆனால் அது நக்கல் அல்ல திமுக தனக்கெதிராக போட்ட ஸ்கெட்ச்சால் உச்ச்க்கட்ட மனஉளைச்சலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, திமுக., வட்டாரத்தில் கூறப்படுகிறது. திமுகவில், ஸ்டாலினுக்கு அடுத்து, அவரது மருமகன் சபரீசன், மகன் உதயநிதி திமுகவில் அதிகார மையங்களாக உள்ளனர். ரகசிய பேச்சு சபரீசனுக்கு, அவரது தொழில் பங்குதாரர் கார்த்தி உதவியாக உள்ளார். இவர், சென்னை, அண்ணாநகர் தொகுதி, எம்.எல்.ஏ மோகனின் மகன். 

இது ஒருபுறம் இருக்க, உதயநிதிக்கு, அவரது நண்பரும்,ஸ்டாலினின் நெருங்கிய நண்பரின் மகன் அன்பில் மகேஷ் உதவியாக உள்ளார். . இவர்கள், 4 பேரும் தான்,  தேர்தல் கூட்டணி ஏற்பாடுகளை கவனித்தனர். வேட்பாளர் தேர்விலும் கவனம் செலுத்தினர். அதேபோல பாமாவுடன் கூட்டணி அமைக்க கடைசி வரை போராடினர்.

 

போதாததற்கு காங்கிரசை சேர்ந்த விஷ்ணுபிரசாத் மூலமாக அன்புமணியிடம் ரகசிய பேச்சு நடத்தியுள்ளனர். ஆனால், ராமதாஸ், வேலுமணி நண்பர்கள் மூலம்,  அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். இதனால், திமுகவின் அதிகார மையங்களாக உள்ள, நான்கு பேரும், அன்புமணி மீது இருந்த கடுப்பில் அவரை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் , அதே சமூகத்தைச் சேர்ந்த செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவின் இந்த பிளானை தெரிந்துகொண்ட அன்புமணி  அந்த 4 பேரை மறைமுகமாக விமர்சனம் செய்து, அவர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளார். மேலும் அன்புமணி. இதனால், அவரை தோற்கடிக்க, அந்த பகுதியில் உள்ள சில தொழிலதிபர்கள் மூலம் திமுக வேட்பாளருக்கு பணஉதவி, திண்ணை பிரசாரம் என நான்கு பேரும் தீவிரம் காட்டி வருவதாகவே சொல்லப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios