அதிமுக கூட்டணியில் சேர்ந்த பாமக, ஓபிஎஸ் இபிஎஸ் மெய் சிலிர்க்கவைக்கும் அளவிற்கு தாறுமாறாக புகழ்ந்து தள்ளி வருகிறது.  கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வருகிறது என ராமதாஸ் புகழ்ந்து தள்ள, அதற்க்கு ஒரு படி மேலே போய்  அதிமுக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி என்று  அன்புமணி புகழாரம் சூட்டியுள்ளார். 

நடக்கவிருக்கும் நாளளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டாபியில் இடம்பெற்றுள்ள பாமக, ஏழு தொகுதியில் நிற்கிறது. அதில் தருமபுரியும் ஒன்று, இங்கு பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி போட்டியிடுகிற்றார். இங்கு நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக உரிமைகளை மீட்கவே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். நம்ம கூட்டணி மெகா கூட்டணி. எல்லா கட்சியும் நம்ம பக்கம் இருக்கிறார்கள். மக்கள் நம்ம பக்கம் இருக்கிறார்கள்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களும் மிகச்சிறப்பான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் அதிமுக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி. அடித்தட்டு மக்கள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கான ஆட்சி எனக் கூறினார்.

தமிழ்நாட்டு உரிமைகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். நாம் தான்  காப்பாற்ற வேண்டும். நான் தருமபுரி மாவட்டத்தில் பிறக்கவில்லை என்றாலும், எனக்கு இது  சொந்தமான மாவட்டமாக இருக்கிறது. என் ஆயுள் காலம் உள்ளவரை இந்த மாவட்ட மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என இவ்வாறு பேசினார். 


 
இதே போல நேற்று விழுப்புரத்தில் வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் பேசிய ராமாதாஸ் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்க வேண்டுமென்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.  கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வருகிறது என்று  தாறுமாறாக புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.