12 லட்சம் வாக்குகளை அள்ள பிளான் போடும் அதிமுக... கடைசி நேரத்தில் அனாமத்தா போவதைத் தடுக்க பக்கா பிளான்!!

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை பல்வேறு வகையில் அடக்கியதால், ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிமுக அரசு மீது பயங்கர கடுப்பில் உள்ள இருந்த அவர்கள், தேர்தலில் எங்கள் வலிமையை காட்டுவோம் என வெளிப்படையாக எச்சரித்தனர். 

ADMK plans 12 lakhs vote

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை பல்வேறு வகையில் அடக்கியதால், ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிமுக அரசு மீது பயங்கர கடுப்பில் உள்ள இருந்த அவர்கள், தேர்தலில் எங்கள் வலிமையை காட்டுவோம் என வெளிப்படையாக எச்சரித்தனர். 

ஆனாலும், இவர்களின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், முதன் முதலாக, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்களை தேர்தல் பணிக்கு களம் இறக்குவது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை அதிமுக அரசு எடுத்தது. இது ஒருபுறமிருக்க ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தரப்பில், 12 லட்சம் ஓட்டுகளையும் சிந்தாமல், சிதறாமல் அள்ள வேண்டும் என  மறைமுக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

அதிமுக அரசு என்ன வியூகம் வகுத்தாலும், இடிசி - எலக் ஷன் டூட்டி சர்ட்டிபிகேட் - என்ற தேர்தல் பணி சான்றை வாங்க மறவாதீர்கள். அதில் தான் சூட்சுமம் உள்ளது என, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர், அரசு ஊழியர்கள்.

எப்படியும், 99 சதவீதம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அதே லோக்சபா தொகுதியில் தான் பணிபுரிய வேண்டி வரும். அதேநேரம், இது நாடாளுமன்ற தேர்தல் என்பதால், தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிக்குள் தான் பணிபுரிய வேண்டியிருக்கும். எனவே, இடிசியை மறக்காமல், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரிடம் பெற்று சென்று விடுங்கள். அச்சான்று மூலம், நீங்கள் பணியாற்றும் மையத்திலேயே, உங்கள் ஓட்டை அளிக்கலாம். 

எனவே, வாக்காளர் வரிசை எண், ஓட்டு மைய விபரத்தை தெரிந்து வைத்து, இடிசியை பெற்று, பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பணிபுரியும் மையத்தில், ஓட்டளித்து, இடிசி மூலம் ஓட்டளித்தவர் விபரத்தையும், ஓட்டு கணக்கு விபர படிவத்தில், மொத்த ஓட்டுகள் எண்ணிக்கை விபரத்தையும் குறிப்பிட்டு விடுங்கள் என அறிவுறுத்தி வருகிறோம். இதன்மூலம், 2 லட்சம் ஆசிரியர்கள், 10 லட்சம் அரசு ஊழியர்களின் ஓட்டுகளில் ஒன்றைக் கூட வீணாக்கக் கூடாது என சபதம் எடுத்துள்ளோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios