தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி பன்னீர் செல்வம் வழிபட்டார்.

தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் தேனி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அமமுக சார்பில் டஃப் பைட் கொடுக்கும் விதமாக  தங்க தமிழ் செல்வன், திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் என செம்ம வெயிட்டான வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் உள்ளனர்.

இப்படி தனது மகனை எதிர்த்து நிற்கும் இரண்டு பேருமே வெயிட்டு கை என்பதால் தனது மனைவி, மருமகளை வாக்கு சேகரிக்க  வைத்துள்ளார். அவங்க மட்டுமல்ல ஓபிஎஸ்ஸின் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜாவின் மருமகள் ஐஸ்வர்யா, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மயில்வேலின் மனைவி ஆகியோர் தேனி கிராமங்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், முக்கியமாக தனது மகன் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டும் என்பதால் ஆதிபராசக்தி கோவிலுக்கு தனது சகாக்களோடு ஆதிபராசக்தி அடிகளாரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.  ஓபிஎஸ் வரும் தகவல் தெரிந்ததும் அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

மேலும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல்,எஸ்.ஆறுமுகம் ஆகியோரை  அறிமுகம் செய்து வைத்து பங்காரு அடிகளாரிடம்  பன்னீர் செல்வம் ஆசிபெற்றார். 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி பன்னீர் செல்வம் வழிபட்டார். தன்னை தேடிவந்த ஓபிஎஸ்க்கு ஆசி வழங்கியிருக்கிறார் ஆதிபராசக்தி அடிகளார்.