கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரிந்து வந்த தாய் வீட்டில் சுகுணா வசித்து வந்தார். அவர் வேலைக்கு சென்ற இடத்தில் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். 

கிருஷ்ணகிரியில் ஆசை வார்த்தை கூறி திருமணமான பெண்ணை 5 மாதம் கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே கூட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. இவரது மகள் சுகுணா (22). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரிந்து வந்த தாய் வீட்டில் சுகுணா வசித்து வந்தார். அவர் வேலைக்கு சென்ற இடத்தில் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதனால் சுகுணா 5 மாதம் கர்ப்பம் அடைந்தார். இதுதொடர்பாக வேணுகோபாலிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். சுகுணா கூறிய தகவலை வேணுகோபால் தனது அண்ணன் கோபிநாத்திடம் தெரிவித்தார். திருமணமாகாத வேணுகோபாலை திருமணம் செய்து கொள் என்று தொந்தரவு செய்தால் உன்னை கொன்றுவிடுவேன் என்று சுகுணாவை கோபிநாத் மிரட்டியுள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சுகுணா காவல் நிலையத்தில் தன்னிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய வேணுகோபால் மீதும், என்னை மிரட்டிய அவரது அண்ணன் கோபிநாத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.