சென்னையில் பயங்கரம்.. இளைஞர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை..!

சென்னை புழல் பகுதியை சேர்ந்த ரிதம் என்ற இளைஞர் நேற்றிரவு ப்ரைட் ரைஸ் வாங்குவதற்காக அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் புழல் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். 

Youth murder in Chennai..!

சென்னையில் ப்ரைட் ரைஸ் வாங்க சென்ற இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புழல் பகுதியை சேர்ந்த ரிதம் என்ற இளைஞர் நேற்றிரவு ப்ரைட் ரைஸ் வாங்குவதற்காக அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் புழல் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியது. 

Youth murder in Chennai..!

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரிதம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பருக்கு வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரிதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அவரது நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Youth murder in Chennai..!

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios