தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்.. தொல்லை கொடுத்த குடிகார மகனை கூலிப்படை வைத்து போட்டு தள்ளிய பெற்றோர்.!

தெலுங்கானா மாநிலம் கம்மத் கிராமத்தை சேர்ந்தவர் ராம் சிங். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராணி பாய். இவர்களது மகன் சாய்ராம் (26). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். 

youth murder case.. parents arrested in Telangana

தினமும் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்திய மகனை பெற்றோர் கூலிப்படை வைத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மத் கிராமத்தை சேர்ந்தவர் ராம் சிங். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராணி பாய். இவர்களது மகன் சாய்ராம் (26). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அடிக்கடி குடிக்க பணம் கேட்டு பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

இதையும் படிங்க;- காதலனை கொலை செய்தால் போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி? கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலம்..!

ஒரே கட்டத்தில் பொறுமை இழந்த பெற்றோர் மகனை கூப்படை வைத்து கொலை செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில், அக்டோபர் 18ம் தேதி சாய்ராம் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாய்ராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

அதில், சாய் ராம் தனது பெற்றோருடன் காரில் கடைசியாக பயணம் செய்தது தெரியவந்தது. பெற்றோரின் கார் இந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்தனர். 8 லட்சம் கொடுத்து பெற்ற மகனை பெற்றோர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  அந்த விஷயத்துக்கு மட்டும் ஒத்துக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த கள்ளக்காதலி! மனவேதனையில் வாலிபர் எடுத்த முடிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios