குறைந்த விலைக்கு பிரியாணி கொடுக்காததால் ஆத்திரம்.. ஊழியரின் மூக்கை வெட்டிய இளைஞர்.. சென்னையில் அதிர்ச்சி.!

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பெரியமேடில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான்(50) என்பவர்  சிக்கன் பிரியாணி கடையில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பிரியாணி கடைக்கு விக்னேஷ் என்ற இளைஞர் 100 ரூபாய் பிரியாணியை 90 ரூபாய்க்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார். 

youth cut off the employee nose for not offering biryani at a low price in nose

சென்னை பெரியமேட்டில் குறைந்த விலைக்கு பிரியாணி கொடுக்க மறுத்த கடை ஊழியரின் மூக்கை வெட்டிய இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பெரியமேடில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான்(50) என்பவர்  சிக்கன் பிரியாணி கடையில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பிரியாணி கடைக்கு விக்னேஷ் என்ற இளைஞர் 100 ரூபாய் பிரியாணியை 90 ரூபாய்க்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார். 

இதையும் படிங்க;- ஹவுஸ் ஓனர் வீட்டில் வைர நகைகளை ஆட்டையை போட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

youth cut off the employee nose for not offering biryani at a low price in nose

ஆனால், பிரியாணியை குறைந்த விலைக்கு தர இயலாது என உஸ்மான் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், இளைஞர் கடை ஊழியர் முகமது உஸ்மானிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

youth cut off the employee nose for not offering biryani at a low price in nose

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடை ஊழியரான முகமது உஸ்மானின் மூக்கு, கை, வயிற்றில் வெட்டியுள்ளார். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்தத போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், விக்னேஷ் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது.

இதையும் படிங்க;-  இளம்பெண்ணுக்கு அந்த இடத்தில் கை வைத்து டார்ச்சர்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! டாக்டர் மிரட்டல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios