ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக்கொண்டிருந்த போது கண்களில் மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டார். 

மிளகாய் பொடி தூவி இளைஞர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக்கொண்டிருந்த போது கண்களில் மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஆத்திரம் தீராததால் அந்த மர்ம கும்பல் இளைஞரின் தலையை துண்டித்து தனியாக எடுத்து சென்றது. 

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலையை தேடி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மிளகாய் பொடி தூவி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.