கேரளா மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்தவர் முர்ஷித்(22). இவரது பெரியப்பா வீடு நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருக்கிறது. அங்கு ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 16 வயது சிறுமி இருக்கிறார். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் சிறுமி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி முர்ஷித்திற்கு உறவு முறையில் சகோதரி ஆவார்.  முர்ஷித் அடிக்கடி தனது பெரியப்பா வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.

அவ்வாறு வருகிற சமயங்களில் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் ரேவதியிடம் ஆசை வார்த்தை கூறி முர்ஷித் உல்லாசம் அனுபவித்திருக்கிறார். இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மீறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் சிறுமிக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் கூறினர். அதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியிடம் விசாரித்த போது முர்ஷித் தன்னை பலாத்காரம் செய்ததை கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோவில் வழக்கு பதிந்த காவலர்கள் முர்ஷித்தை அதிரடியாக கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: அசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்..! நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..!