மாம்பழம் கேட்டு தொல்லை கொடுத்ததால் 5 வயது சிறுமியை சித்தப்பா அடித்து கொலை செய்துள்ளார் பகிர் சம்பவம் நடந்துள்ளது. மேலும் அக்குழந்தையின் கழுத்தை அறுத்து கொடூரத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். 

மாம்பழம் கேட்டு அழுது தொல்லை கொடுத்ததால் 5 வயது சிறுமியை சித்தப்பா அடித்து கொலை செய்துள்ளார் பகிர் சம்பவம் நடந்துள்ளது. மேலும் அக்குழந்தையின் கழுத்தை அறுத்து கொடூரத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் அதிக அளவில் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர், தாங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாது என்ற காரணத்தால், வக்கிர மனம் படைத்தவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர், ஆனால் சில நேரங்களில் அது வெளியில் தெரிந்து அவர்கள் தண்டிக்கப்படும் சம்பவங்களும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதேவேலையில் சில கொடூர மனம் படைத்தவர்கள் குழந்தை என்றும் பாராமல் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது, சில நேரங்களில் அடித்துக் கொலை செய்வது போன்ற கொடூரங்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் மாம்பழம் கேட்டு தொல்லை கொடுத்த ஐந்து வயது அண்ணன் மகளை அவளின் சித்தப்பா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு: - உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அடுத்துள்ள கெடா குருதான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி, அவரிட் மகள் கைரு நிஷா (5) பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார், சிறுமியுடன் அவரது சித்தப்பா உமர் தீன் இருந்துள்ளார். இந்நிலையில் தனது சித்தப்பா மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அப்போது 5 வயது சிறுமி கைரு நிஷா, தனக்கும் சாப்பிட மாம்பழம் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். ஆனால் அந்த நபர் சிறுமிக்கு மாம்பழம் கொடுக்கவில்லை

இதையும் படியுங்கள்:  மாணவியை ஸ்கூல் மொட்டை மாடி அறையில் வைத்து பிரின்ஸ்பல் மகன் செய்த காரியம்... வெளியான பகீர் தகவல்

ஆனால் சிறுமி தனக்கும் கொஞ்சம் மாம்பழம் கொட்ங்கள் என அழுததாக தெரிகிறது. இதில் பொறுமை இழந்த அந்த நபர்,சிறுமியில் தொடர் வறுபுறுத்தலால் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த தடியால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்தார், அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை, அவர் சமையல் அறையில் இருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை கரகரவென அறுத்தார், இதில் வீடு முழுக்க ரத்தம் பரவியது, பின்னர் அதை மறைக்க சிறுமியின் சடலத்தை கோணிப்பையில் கட்டிய அவர், அருகிலிருந்த வனப்பகுதியில் வீசினார்.

இதையும் படியுங்கள்: உடலை எரிக்க வேண்டாம் புதைச்சிக்கலாம்.. திடீரென முடிவை மாற்றிய கள்ளக் குறிச்சி மாணவி குடும்பத்தினர். காரணம்.??

இதன்பிறகு தனக்கு எதுவுமே தெரியாதது போல நடித்துள்ளார், பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் மகளை தேடினர் ஆனால் எங்கு தேடியும் அவளை காணவில்லை இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், சிறுமியின் உறவினர்கள் அந்த பகுதி முழுக்க தேடுதலில் ஈடுபட்டனர் அப்போது சிறுமியை கொலை செய்த உமர் தீனும் அவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல நடித்தார். இந்நிலையில் உமர் தீன் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அறிந்து கொண்ட உமர்தீன் தலைமறைவானார். சிறுமியை கொன்றதுஉமர் தீன் தான் என்பதை உறுதி செய்த போலீசார் வனப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர்.

அவர் சிறுமியை கொல்ல பயன்படுத்திய கத்தி மற்றும் இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபர் கொடுத்த தகவலின்படி சிறுமியின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐபிசி பிரிவு 302 கொலை வழக்கு பதிவு செய்தது போலீசாருக்கு உமர் தீன்னை சிறையில் அடைத்தனர். மாம்பழம் கேட்டு தொல்லை கொடுத்ததால் சொந்த சித்தப்பாவை சிறுமியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.