14 வயது சிறுமியிடம் செய்யுற வேலையா இது.. இளைஞரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சிவசங்கர் (22). அதே பகுதியில் வசிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

Youth arrested for marrying 14-year-old girl.. Youth Arrest under Posco Act tvk

14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சிவசங்கர் (22). அதே பகுதியில் வசிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி சிவசங்கர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- அண்ணியை கதறவிட்டு கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்.! நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்.!

இந்நிலையில் சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர். சிறுமியை தேடி வந்த நிலையில் சிவசங்கர் திருமணம் முடித்து தேனி அருகே உள்ள அன்னஞ்ஜி பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. 

இதையும் படிங்க;- என் கூட பேசலனா.. நம்ம ஒண்ணா இருந்த போட்டோவை வெளியிடுவேன்.. மிரட்டிய காதலன்.. மரண வாக்குமூலம் கொடுத்த மாணவி!

இதனையடுத்து சிறுமியை மீட்டதோடு இளைஞர் சிவசங்கரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சிவசங்கர் சிறுமியை அழைத்துச் சென்று குழந்தை திருமணம் செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இளைஞர் மீது குழந்தை திருமணச் தடைச் சட்டத்தின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios