என் கூட பேசலனா.. நம்ம ஒண்ணா இருந்த போட்டோவை வெளியிடுவேன்.. மிரட்டிய காதலன்.. மரண வாக்குமூலம் கொடுத்த மாணவி!
சென்னை பெரம்பூர் பாரதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(18). இவரது தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதால் தாய் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால் வீட்டில் இருந்த பினாயிலை குடித்துவிட்டு மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பாரதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(18). இவரது தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதால் தாய் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கிருஷ்ணகுமாரி கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியை சேர்ந்த விக்கி (22) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- சென்னையில் ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. விடுதியில் இறந்து கிடந்த இரண்டு ஐடி ஊழியர்கள்.. நடந்தது என்ன?
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாணவி, விக்கியுடன் பேசுவதையும் சந்திப்பதையும் அடியோடு தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கி இருவரும் நெருங்கி பழகிய போது எடுத்த புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
இதையும் படிங்க;- Honour killing: காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை.. பெண்ணின் பெற்றோர் கைது.!
இதனால் மனவேதனையில் இருந்து வந்த கல்லூரி மாணவி கிருஷ்ணகுமாரி வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்துவிட்டு கடந்த 2ம் தேதி வீட்டின் 2வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். இதில் தலை, முகத்தில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியிடம் அல்லிக்குளம் 11வது நீதிமன்ற நீதிபதி லட்சுமி நேரில் சென்று மரண வாக்குமூலம் பெற்றார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி கிருஷ்ணகுமாரி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.