MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Honour killing: காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை.. பெண்ணின் பெற்றோர் கைது.!

Honour killing: காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை.. பெண்ணின் பெற்றோர் கைது.!

தஞ்சாவூர் அருகே  மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை பெருமாள் தாய் ரோஜா இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

1 Min read
vinoth kumar
Published : Jan 10 2024, 01:41 PM IST| Updated : Jan 10 2024, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thanjavur Young Girl Case

Thanjavur Young Girl Case

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (20). இவர் பக்கத்துக்கு கிராமமான பூவாளூரை சேர்ந்த நவீன்(20). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். படிப்பை முடித்த இருவரும் தற்போது இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

24
Love Marriage

Love Marriage

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 2 பேரும் கடந்த டிசம்பர் 31ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் வாட்ஸ்அப் குரூப்பில் வைரலானது. இதுதொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. உள்ளே புகுந்த போலீஸ்..!

34
Thanjavur Honor Killing

Thanjavur Honor Killing

இதனையடுத்து போலீசார் கடந்த 2ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். பின்னர், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்துள்ளனர். பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

இதையும் படிங்க;- பெத்த மகனையே கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன ஒரு வெறி! சிக்கிய தனியார் நிறுவன சிஇஓ பெண் அதிகாரி.!

44
Parents Arrested

Parents Arrested

 இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் காதலன் நவீன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காதல் திருமணம் செய்த மகளை ஆணவக்கொலை செய்த வழக்கில் தந்தை பெருமாள் - தாய் ரோஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இருவரும் நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கௌரவக் கொலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved