5ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கிறது கரடிசித்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. வயது 27. இவர் அந்த பகுதியில் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். அந்த கிராமத்தின் அருகே இருக்கிறது வடகுநந்தல். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரேவதி.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறுமியான இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சில மாதங்களுக்கு முன்பாக பள்ளி விடுமுறைக்காக தனது சித்தி வீட்டிற்கு சென்ற ரேவதி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்த பகுதியாக வந்த கோபி சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் சென்றிருக்கிறார். சிறுமியிடம் பேச்சு கொடுத்த கோபி, அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதை வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன ரேவதி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரேவதி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது தனது சித்தி வீட்டில் வைத்து தன்னை கோபி பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி ரேவதி கதறி அழுதுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கோபியை கைது செய்துள்ளனர்.