விராலிமலை அருகே கள்ளக்காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் 3 பேரால் கதற கதற பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 24 வயது ஆணும், 23 வயது பெண்ணும் பணிபுரிகின்றனர். விராலிமலை சேர்ந்த இருவருக்குமே திருமணமாகிவிட்டது. இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 25ம் தேதி இரவு பணி முடிந்து இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

நிறுவனத்துக்கு வெளியே அந்த பெண் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது  இருசக்கர வாகனத்தில் அந்த வாலிபர் அந்தப் பெண் ஏற்றிக்கொண்டு, திருச்சி நோக்கி வந்தார். வழியில் மணிகண்டம் பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருட்டு பகுதியில் உள்ள புதருக்குள் ஒதுங்கினர். பின்னர், இருவரும் உச்சக்கட்ட உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் பட்டா கத்திகளுடன் திடீரென அந்த இடத்திற்கு வந்தனர். அவர்ககளை பார்த்ததும் கள்ளக்காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்தது. பின்னர், 3 பேரும் அந்த வாலிபரை அடித்து உதைத்து கை, கால்களை கட்டினர். 3 பேரில் ஒருவர் அந்த வாலிபரின் அருகில் நின்று பார்த்துக் கொள்ள மற்ற இருவரும் கத்தியை காட்டி மிரட்டி  பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்தனர். என்னை விட்டு விடுங்கள் என்று அந்த பெண் கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. பின்னர் வாலிபருக்கு காவல் இருந்த மூன்றாவது நபர் வந்து பலாத்காரம் செய்தார்.

பின்னர் அந்த பெண் அணிந்திருந்த  நகைகள் மற்றும் செல்போன், அந்த வாலிபரிடமிருந்து அந்த செல்போன், மணிபர்ஸ் எடுத்துக்கொண்டு ஓடி விட்டனர். பின்னர் கள்ளக்காதலர்கள் இருவரும் விராலிமலை காவல் நிலையத்தில் தனிதனியாக புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நகையை பறித்து கொண்டு பலாத்காரம் செய்த முருகன்(22), ஹெமராஜ் (28), நந்தக்குமார் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.