இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் ஈரோடு பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் அந்த குழந்தை மகாலட்சுமி என்பது தெரியவந்தது. இளம்பெண்ணின் பெயர் அல்போன்ஸ் மேரி(30) என்றும் அவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கும் அரசன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலை ராஜன். இவரது மனைவி இசக்கி. இந்த தம்பதியினருக்கு மகாலட்சுமி என்கிற 3 வயது மகள் இருக்கிறாள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சுடலை ராஜன், தனது தந்தை மாரியப்பன் மற்றும் மகள் மகாலட்சுமியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். கடந்த வாரம் மாரியப்பன், தனது பேத்தியை அழைத்து கொண்டு பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மாரியிடம் தான் ஆதரவற்றவர் என்றும், தன்னை அழைத்து சென்றால் குழந்தையை நன்றாக பார்த்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார். மாரியும் அப்பெண் மீது சபலம் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த நேரத்தில் சுடலை ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். மது அருந்தி போதையில் இருந்த மாரி நன்றாக தூங்கியிருக்கிறார். அப்போது குழந்தையை அழைத்து கொண்டு இளம்பெண் மாயமாகிவிட்டார். கண்விழித்து பார்த்த போது பேத்தியையும் அப்பெண்ணையும் காணாது திகைத்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் தனது மகனுக்கு தகவல் அளித்தார். அதிர்ச்சியடைந்த மகன், தந்தை திட்டியதோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் இளம்பெண் ஒருவர் குழந்தையை அழைத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தை தீவிரமாக தேடப்பட்டு வந்தது. இந்தநிலையில் இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் ஈரோடு பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் அந்த குழந்தை மகாலட்சுமி என்பது தெரியவந்தது. இளம்பெண்ணின் பெயர் அல்போன்ஸ் மேரி(30) என்றும் அவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மாரியப்பனின் வீட்டில் இருந்து குழந்தையை அழைத்துக்கொண்டு மேரி வேளாங்கண்ணி சென்றுள்ளார். அப்போது தந்தையை காணாது குழந்தை அழுதுள்ளது. இதனால் மீண்டும் பல்லடம் வருவதற்காக ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு குழந்தையை காணவில்லை என்கிற விளம்பரத்தை கண்டு பொதுமக்கள் காவல்துறையில் பிடித்து கொடுத்தனர். அவர் மீது குழந்தை கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read: அடுத்தடுத்து தூக்கில் பிணமாக தொங்கிய இளம் தம்பதி..! பரிதவிக்கும் ஒன்றரை வயது குழந்தை..!