இளம் பெண்ணுக்கு பிரியாணியில் மயக்கமருந்து போட்டு கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டார்.

கம்பம் மாலையம்மாள் புரத்தைச் சேர்ந்த குமார் மகன் சக்தி நாகராஜ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை கடந்த 3 மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அவர் ஏற்க மறுத்தும் மாணவி தினமும் பள்ளி செல்லும் போதும் வரும் போதும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். மேலும் அவரது போட்டோவை தனது போட்டோவுடன் சேரத்து மார்பிங் செய்து இண்டர்நெட்டில் பரவ விட்டுள்ளார்.

இது மட்டுமின்றி அவர் தனது தாய், தந்தை ஆகியோரை அழைத்து வந்தும் மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்த சக்தி நாகராஜ் பிரியாணியை சாப்பிடுமாறு கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கி விழவே அவரை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அதை போட்டோ மற்றும் வீடியோவை எடுத்துக் கொண்டார். பின்னர் மயக்கம் தெளிந்ததும் எழுந்த மாணவி நிர்வாணக்கோலத்தில் இருந்ததைப் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் மாணவியிடம் அந்த வீடியோவை காட்டி இது குறித்து வெளியே சொன்னால் இதனை இந்த வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன், நீங்க உங்கள் குடும்பத்தோடு சாகவேண்டியது தான் என மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விபரங்களை கூறினார். அவரது தந்தை கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பொன்னி வளவன் சக்தி நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த தந்தை குமார் மற்றும் தாய் செல்வி ஆகியோரையும்  கைது செய்யப்பட்டனர்.